Published:Updated:

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 41 நாட்கள் நடைபெற்று  முடிவடைந்துள்ளது.பேரவைக் குறிப்பின்படி துல்லியமாக சொல்ல  வேண்டுமானால் 204 மணி நேரம் 10 நிமிடங்கள்  நடந்துள்ளது.அப்படி என்னதான் இந்த 41 நாட்களில்  நடந்திருக்கிறது என்று திரும்பி பார்த்தால் வேடிக்கையாக, அல்ல...அல்ல வேதனையாக இருக்கிறது.

இந்திய ஜனநாயக கட்டமைப்பில் உறுதிமிக்க தூண்களில் ஒன்று  சட்டமன்றம், தன்னுடைய உயரிய நோக்கங்களை  நிறைவேற்றக்கூடிய வகையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை  அனுமதித்து, அதன்வாயிலாக அரசாங்கத்தின் சட்டங்களும்,  திட்டங்களும் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதே இன்றைக்கு கேள்விக்குறியாக  ஆகிவிட்டது.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தலைவர்  கலைஞர், எம்.ஜி.ஆர்....என்று தலைவர்கள் பலரும்  வீற்றிருந்த அவை நமது சட்டமன்றம்.கருத்துமோதல்கள்  நிகழ்ந்தாலும் கடுகளவேனும் கண்ணியம் குறையாமல் இருந்த  சபை. சூடான விவாதங்கள், சுவையான  சொல்லாடல்கள்...என்று ஒரு காலத்தில் பரிமணித்த சபை,  இன்று ஆளும்கட்சி புகழ்பாடும் சபாமன்றமாக  பரிமணித்துப்போனதென்னவோ சோகம்தான்.

ஆளும்கட்சி என்ற குதிரைக்கு எதிர்கட்சி என்ற கடிவாளம்  இருந்தால்தான், ஆட்சி நிர்வாகம் என்கிற தேர் சரியான  பாதையில் பயணிக்க முடியும் என்கிற அடிப்படை நியதி  முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, இன்று எதிர்கட்சிகளின் குரல்  என்றாலே, அது ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று என்ற  கருத்தாக்கம்,ஆளும் தரப்பில் வலுப்பெற்றிருக்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆட்சியில் இருந்தாலும்,  இலாவிட்டாலும், தமிழகத்தின் அசைக்க

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

முடியாத ஒரு சக்தியாக  - இன்றைக்கு சட்டப்பேரவையில் எண்ணிக்கை அடிப்படையில்  பிரதான எதிர்கட்சியாக செயல்படும் வாய்ப்பை இழந்திருந்தும் கூட  - மக்கள் மன்றத்தில் வலிமையான, உண்மையான  எதிர்கட்சியாக பணியாற்றிக்கொண்டிருக்கும் திமுக  உறுப்பினர்கள், கடந்த ஒருமாத காலமாக பேரவை நடவடிக்கை  எதிலும் கலந்துகொள்ள முடியாமல் சஸ்பெண்ட்  செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்நிலை, ஜனநாயக மரபை புதை  குழிக்கு அனுப்பும் செயல் அல்லாமல் வேறு இல்லை.

பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு  தங்கள் தொகுதி பிரச்னைகளை பற்றி பேசக்கூடிய வாய்ப்பு  மறுக்கப்பட்டு, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல்  திமுக உறுப்பினர்கள் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பொதுவாக அவையிலே நாங்கள் இருந்த சொற்ப காலத்திலே  கூட நாங்கள் மென்மையாக எடுத்துவைத்த விமர்சனங்களை கூட  ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் ஆளும்கட்சி இல்லை.

எங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, திமுக சட்டமன்ற  எதிர்கட்சித்தலைவர் தளபதி ஸ்டாலின் உட்பட திமுக  உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக அவைக்காவலர்கள் மூலம்  குண்டுக்கட்டாக வெளியேற்றியது என்பது அன்றாட  நடைமுறையாகவே மாறிவிட்டது.

கழக உறுப்பினர்கள் பேச ஆரம்பித்துமே அனைத்து அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து குறுக்கீடு என்ற பெயரில் உரை நிகழ்த்துவது, கழக உறுப்பினர்களின் நேரத்தை பறித்து பேச விடாமல் செய்தது என்பது ஒரு தொடர் கதையாக மாறிப்போனது.

அவைக்குப் புதிய உறுப்பினர்களோ அல்லது இளம் அமைச்சர்களோ சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் கடுமையாக பேசிவிட்டால், முன் வரிசையில் உள்ள மூத்த அமைச்சர்கள் உடனே எழுந்து, எதிர்கட்சி உறுப்பினர்களை அமைதிபடுத்தும் விதத்தில் பேசி, சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கச் செய்து, சபையை சுமூகமாக நடத்தச் செய்வதுதான் மரபு. ஆனால், இப்போதெல்லாம் மூத்த அமைச்சர்களின் உரையை படிப்பவர்களும், கேட்பவர்களுமே எந்த அளவிற்கு தரம் தாழ்ந்த உரைகள் நிகழ்த்தப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கேள்வி நேரத்திலேயே குற்றச்சாட்டுகள் சுமத்துவதன் மூலமாகவும், கலைஞர் அவர்களை இழித்தும், பழித்தும் பேசுவதன் மூலமாகவும், எப்படியாவது தி.மு.க.வை வம்புக்கு இழுக்க வேண்டும்; அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக பதிலடி கொடுக்க முயன்றால், எங்களை வெளியேற்றி விடவேண்டும் என்பதே ஆளுங்கட்சியின் நோக்கமாக இருக்கிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

ஒருமுறை சத்துணவு திட்டத்தைப் பற்றி கலைஞர் அவர்கள் சட்டசபையில் ஒரு கடுமையான வார்த்தைகளால் குறை கூறினார் என்று ஒரு அமைச்சர் தெரிவித்தார். உடனே தளபதி ஸ்டாலின் எழுந்து ஆணித்தரமாக ஆதாரம் எங்கே? என்று கேட்டவுடன், அமைச்சர் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். தொடர்ந்து ஆதாரத்தை கேட்டபோதெல்லாம் அதை தரமுடியாமல், ஒரு நாள் ரகுமான்கான் சட்டசபையில் சொன்னார்; அவர் சொன்னால் கருணாநிதி சொன்ன மாதிரிதான் என்று அந்த அமைச்சர் அந்தர் பல்டி அடித்தாரே தவிர, இன்றுவரை தளபதி கேட்ட ஆதாரத்தை தரவேயில்லை.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏபேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஜீரோ ஹவரில், நாட்டில் அன்றாடம் நிகழும் முக்கிய நிகழ்வுகள் குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் விளக்கத்தை பெறுவது கடமை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சர்கள் பரீட்சைக்கு படிப்பதுபோல், காலையில் செய்தி தாள்களை படித்துவிட்டு பேரவையில் விளக்கம் அளிக்க தங்களை தயார் செய்து கொள்வார்கள்.

தற்பொழுது நிலைமையே தலைகீழ். எதிர்கட்சிகளின் உரிமை பறிபோய் கேள்வி நேரம் முடிந்தவுடன், விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை படிப்பதென்பது எழுதப்படாத சட்டமன்ற நடைமுறையாக மாறிவிட்டது. பாராட்டும், புகழ் மாலைகளும் சூழ்ந்து கொண்டு மக்களின் வேதனைக் குரல்களை கேட்க முடியாமல் செய்து விட்டது.

இனிமேல் தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் 'மாணவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ்'. என்று சட்டம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருந்தது?- விமர்சிக்கிறார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ

சட்டமன்ற நெறிமுறைகளுக்கு முரணாக பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வை முதலில் பேச அழைக்காமல், கடைசியாக பேச அழைத்ததும், அவர்கள் சபைக்கு வராமல் புறக்கணித்ததும், தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றியவுடன் அவசர, அவசரமாக தே.மு.தி.க.வை 'பெரிய மனது' பண்ணி உள்ளே அழைத்து அ.தி.மு.க., ஜனநாயக அரிதாரம் பூச முயன்றதும் தனிக்கதை. இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கிறது.

எப்படியோ... மின்சார வெட்டு எப்போது தீரும்? என்ற ஒரேயொரு கேள்விக்குக்கூட விடை இல்லாமல் முடிந்திருக்கிறது இந்த சட்டமன்றம். மற்றபடி இதுவரை வெளிவந்த அறிவிப்புகள், அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள்... இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, 'ஆடம்பரம் என்னவோ சிலாக்கியம்; ஆனால் அமுதுபடிதான் பூஜ்ஜியம்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.