Published:Updated:

வன்னியர்களின் ஓட்டு தேவையில்லையா?; பா.ம.க. அல்லாத வன்னியர்கள் எச்சரிக்கை

வன்னியர்களின் ஓட்டு தேவையில்லையா?; பா.ம.க. அல்லாத வன்னியர்கள் எச்சரிக்கை
வன்னியர்களின் ஓட்டு தேவையில்லையா?; பா.ம.க. அல்லாத வன்னியர்கள் எச்சரிக்கை

தர்மபுரி: வன்னியர்களின் ஓட்டு தேவையில்லையா? என்று பா.ம.க. அல்லாத வன்னியர்கள் தரப்பில் இருந்து அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தர்மபுரியில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வன்னியர்களின் ஓட்டு தேவையில்லையா?; பா.ம.க. அல்லாத வன்னியர்கள் எச்சரிக்கை

தர்மபுரியில் நேற்று பா.ம.க. அல்லாத பல்வேறு கட்சிகளை சார்ந்த வன்னியர்கள் ஒன்றிணைந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட தி.மு.க.வின் இளைஞர் அணியை சார்ந்த பேச்சாளர் முரளி தலைமை தாங்கினார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல் விவகாரத்திலும், சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நடந்த கலவரத்திலும், அதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் நடந்த வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டதாக ஒட்டு மொத்த வன்னி சமூகத்தின் மீதும் அனைத்து தரப்பினரும் குறை கூறி வருகின்றனர். மாநில அரசும் இதையே செய்து வருகிறது.

வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்களை நீதி விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு சட்டபடி தண்டனை வழங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்திலும் மொத்த வன்னியர்களும் ஈடுபட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஆளும் அரசும், ஜனநாயக கட்சிகள் என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும் பிர கட்சிகளும் திட்டமிட்டு அவதூரினை பரப்பி வருகின்றனர். இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

##~~##
வன்னியர்களில் சொற்ப அளவிலே இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக மொத்த வன்னிய சமூகத்தையும் அசிங்கப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. இனியும் இது தொடர்ந்தால், கட்சி பாகுபாட்டை கடந்து வன்னியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களது கோபத்தை பதிவு செய்வோம். எங்கள் ஓட்டு வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த காரியங்களை தொடர்ந்து செய்துகொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து பேசினார்.
இவரது பேச்சு வன்னியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.ராஜாசெல்லம்