Published:Updated:

மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை!- பா.ம.க பாலு தகவல்

மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை!- பா.ம.க பாலு தகவல்
மக்களவைத் தேர்தலுக்கு முன் 7 பேரும் விடுதலை!- பா.ம.க பாலு தகவல்

மிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து தமிழ்நாட்டை நாசம் செய்துவிட்டன என பா.ம.க சொல்லிவந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அன்புமணி ராமதஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தனர். இந்த நிலையில்,  பா.ம.க திடீரென தாங்கள் கடுமையாக விமர்சனங்களையும், ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த அதே அ.தி.மு.கவுடன்  ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கூட்டணி அமைத்துள்ளனர்.

பா.ம.க, அ.தி.மு.க அமைத்துள்ள கூட்டணியில் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க-வும் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலை மையமாக வைத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பா.ம.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பாலு விகடனுக்கு அளித்த பேட்டியில், `` எங்களுடைய பத்து அம்ச கோரிக்கைகளில் முக்கியமானது ஏழு தமிழர் விடுதலை. இதுகுறித்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். கண்டிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுதலை செய்யப்படுவார்கள். அடுத்த ஏழு நாள்களில் விடுதலை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

இந்த நிலையில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த அதிருப்தியில் உள்ள பா.ம.கவைச் சார்ந்தவர்கள் பேசும்போது, `` இத்தனை நாள்களாக திராவிடக் கட்சிகளை எதிர்த்துப் பேசி மீண்டும் அதே திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைக்கும்போது ஏற்படும் விமர்சனங்களை மறைக்க ஏழு பேர் விடுதலையை தன் பங்குக்கு பா.ம.க தலைவர்கள் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்”என்றனர்.