Published:Updated:

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: பி.சி.சாக்கோ பேட்டி

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: பி.சி.சாக்கோ பேட்டி
பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: பி.சி.சாக்கோ பேட்டி

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றும் எண்ணமில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறினார்.

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: பி.சி.சாக்கோ பேட்டி

கடந்த 2006-2009ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். அப்போது நிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்றாக குற்றச்சாட்டு கிளம்பியது. இதுமட்டுமின்றி, ரயில்வே அமைச்சர் பன்சாலின் உறவினர், ரயில்வே வாரியத்தில் முக்கிய உறுப்பினர் பதவிக்காக லஞ்சம் வாங்கிய விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. இந்த பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. பிரதமர் வீட்டையும் சில தினங்களுக்கு முற்றுகையிட முயன்றனர்.

##~~##
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும் வரை பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றுவதாக இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் பலன் வாய்ந்த பிரதமாக இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு காலம் இன்னும் இருக்கிறது. வரும் தேர்தல் யார் தலைமையில் என்ற கேள்வி எங்களிடம் இல்லை. தேர்தலை முன்னரே நடத்தும் எண்ணமும் இல்லை'' என்று கூறிய அவர்,
உணவு பாதுகாப்பு, நிலம் கையகப்படுத்துதல் போன்ற மசோதாகள் மீது விவாதம் நடத்தவும், அந்த மசோதாக்களை விரைவில் நிறைவேற்றவும் தயாராக இருக்கிறோம். சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்பினால், இது குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் தயார் எனவும் தெரிவித்தார்.