Published:Updated:

ஜெயலலிதாவை டெல்லிக்கு மாற்றுங்கள்: போடியில் முழங்கிய நாஞ்சில் சம்பத்

ஜெயலலிதாவை டெல்லிக்கு மாற்றுங்கள்: போடியில் முழங்கிய நாஞ்சில் சம்பத்
ஜெயலலிதாவை டெல்லிக்கு மாற்றுங்கள்: போடியில் முழங்கிய நாஞ்சில் சம்பத்

தேனி: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜார்ஜ் கோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டைக்கு டிரான்ஸபர் கொடுங்கள் என போடிநாயக்கனூரில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

ஜெயலலிதாவை டெல்லிக்கு மாற்றுங்கள்: போடியில் முழங்கிய நாஞ்சில் சம்பத்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அ.தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் நடந்தது. போடி நாயக்கனூர் நகரச்செயலாளர் ஏசி.பாலமுருகன் தலைமை வகிக்க, போடி நகர்மன்றத் தலைவர் பழனிராஜ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொகுதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஜெயலலிதாவை டெல்லிக்கு மாற்றுங்கள்: போடியில் முழங்கிய நாஞ்சில் சம்பத்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசும்போது, '21 ஆயிரம் கோடி ரூபாயை கல்விக்கு ஒதுக்கி சாதனை செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த இரண்டு வருடத்தில் 36 கல்லூரிகளை திறந்து கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக தாலிக்கு தங்கம், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் என பல திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். அடுத்த முதல்வராகும் தகுதி அவருக்கு மட்டுமே இருப்பதாக டெல்லி பத்திரிகைகள் எழுதி வருகின்றன என்றார்.

##~~##
இறுதியாக பேசிய நாஞ்சில் சம்பத், ''18 வருடங்கள் யாருக்காக உழைத்தேனோ, அவர்களாலேயே நான் அவச்சொல்லுக்கு ஆளானேன். எல்லோரும் என்னை கைவிட்டபோது முதல்வர்தான் என்னை காப்பாற்றினார். டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் அம்மா பேசிக்கொண்டிருந்த போது, மணி அடித்து அம்மாவை பேச விடாமல் அவமதித்தார்கள். அதற்கு கருணாநிதி மணி அடித்தால் என்ன பேச வேண்டியதுதானே என சொல்கிறார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர், இது எனக்கு இழைக்கப்பட்ட கொடுமை இல்லை, மொத்த தமிழகத்திற்கே இழைக்கப்பட்ட கொடுமை என என்றார்.
சட்டமன்றத்தில் அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து அவமதித்தபோது, சட்டமன்றத்தில் இனி முதல்வராக மட்டுமே காலடி வைப்பேன் என சபதமிட்டு, அதன்படி செய்து காட்டியவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காவிரியை மீட்டார். அதுபோல இலங்கை தமிழர் பிரச்சனையில் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும் என்றாலும், முல்லை பெரியாறு அணையை மீட்க வேண்டும் என்றாலும் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்காக உங்களிடம் மடிப்பிச்சை கேட்கிறேன். முதல்வருக்கு ஜார்ஜ் கோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டைக்கு டிரான்ஸபர் கொடுங்கள்'' என்றார்.
சண்.சரவணக்குமார்
படங்கள்:
வீ.சிவக்குமார்