Published:Updated:

`66 கோடி பெண்கள் பின்னணியில் இருக்கிறார்கள்; 283 தொகுதிகளில் தனித்துப் போட்டி!’ - தேசிய பெண்கள் கட்சி

`66 கோடி பெண்கள் பின்னணியில் இருக்கிறார்கள்; 283 தொகுதிகளில் தனித்துப் போட்டி!’ - தேசிய பெண்கள் கட்சி
`66 கோடி பெண்கள் பின்னணியில் இருக்கிறார்கள்; 283 தொகுதிகளில் தனித்துப் போட்டி!’ - தேசிய பெண்கள் கட்சி

`பெண்களுக்கான அதிகாரத்தை கேட்டுப் பெறுவதை விட, நாமே அடைய வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் தேசிய பெண்கள் கட்சி தொடங்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் ஸ்வேதா ஷெட்டி தெரிவித்துள்ளார். 

இன்று மதுரையில் நடந்த அக்கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா, `` 2012ஆம் ஆண்டு  நாட்டில் முதல்முறையாக பெண்களுக்கான தேசிய அளவிலான கட்சியாக இக்கட்சியை தொடங்கினோம். பெண்களுக்கான அதிகாரத்தை கேட்டு பெறுவதை விட, நாமே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்சி தொடங்கப்பட்டது. 

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். தாய்மார்களுக்கான கட்சியாகவும் இதைத் தொடங்கியுள்ளோம். தேசிய அளவில் பெண்கள் ஆதரவு தந்துள்ளனர். இந்திய வர்த்தகத்தில் 5 சதவிகிதமாக உள்ள பெண்களின் பங்களிப்பை உயர்த்த வேண்டும். பெண்கள் முன்னேற்றம் பற்றிய வழிப்புஉணர்வு இன்னும் முழுமையாக மக்களிடம் சென்றடையவில்லை. பெண் குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது.

பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 283 தொகுதிகளில் எங்களது கட்சி சார்பில்  வேட்பாளர்கள் போட்டியிட உள்ளோம். எங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஆண்களும் வேட்பாளராக நிறுத்தப்படுவர். ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சியைப்போல எங்களது கட்சியை உருவாக்குவோம். நாட்டில் உள்ள 66 கோடி பெண்கள் எங்கள் கட்சிக்கு பிண்ணனியில் உள்ளனர்’’ என்றார்.