Published:Updated:

பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்ட அரியலூர் காங்கிரஸ்

பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்ட அரியலூர் காங்கிரஸ்
பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்ட அரியலூர் காங்கிரஸ்

அரியலூர்: அரியலூரில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்ட அரியலூர் காங்கிரஸ்

சென்ற முறை சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி சீட்டை கைப்பற்றும் நோக்கில் ஆயிரம் பேர்களை டெல்லிக்கு அழைத்து சென்று ராகுல் காந்தியை சந்தித்து வந்தவர் மாநில செயற்குழு உறுப்பினர் மணிரத்தினம். ஆனால், கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அந்த சீட் கிடைத்தது.

பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போட்ட அரியலூர் காங்கிரஸ்

அதில் கட்சி விஷயத்தில் மணிரத்தினம் மிகுந்த மன வருந்தத்தில் இருந்தாராம். இந்த முறை எப்படியாவது அந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் இப்போதே அரியலூரில் அச்சாரம் போடத் தொடங்கியுள்ளார் மணிரத்தினம்.

ஜோதி பயணம் குறித்து மணிரத்தினம் கூறுகையில், ''இந்தியாவின் முன்னாள் பிரதமர்

##~~##
ராஜீவ்காந்தியின் 22-வது நினைவு நாள் வரும் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி பயணம் இன்று அரியலூரில் தொடங்கியது. ஜோதி பயணத்தை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாளை. அமரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த ஜோதியானது ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்கள் வழியாக, ஶ்ரீபெரும்புதூரை சென்றடையும். இந்த பயணத்தின்போது, மத்திய அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களையும், இலங்கை தமிழர்களுக்கு அரசு செய்து வரும் உதவிகள் உள்ளிட்டவைகள் பற்றிய அனைத்து சாதனைகள் குறித்து மக்களிடையே விளக்கி கூறப்படும்.

மேலும் காட்டுமன்னார்கோவிலில் அகதிகள் முகாமிலுள்ள குழந்தைகளை காங்கிரஸ் கட்சி தத்தெடுத்து அவர்களின் கல்வி செலவினை ஏற்றுக்கொள்ள இருக்கிறது என்பது குறித்தும் பொதுமக்களிடம் விளக்க இருக்கிறோம்'' என்றார் மணிரத்தினம்.

இந்த ஜோதி பயணம் நடத்துவது சிதம்பரம் தொகுதியை கைப்பற்றுவதற்காகத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

-எம்.ராமசாமி