Published:Updated:

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!
கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

இந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2tAYhXk

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

"பா.ம.க-வுக்கு இணையாக அல்லது அதிகமாக சீட்டுகள் கேட்டதால், தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை பி.ஜே.பி தரப்பிடமே விட்டுவிட்டது அ.தி.மு.க தலைமை. பி.ஜே.பி சார்பில் பேசியவர்களிடம், 'கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் என்ன குறைந்து விட்டோம்?' என்று சூடாக ஆரம்பித்து, 'வடக்கு மாவட்டங்களில் மட்டுமே வாக்குவங்கியை வைத்துள்ள பா.ம.க-வுக்கு ஏழு சீட் தரும்போது, மாநிலம் முழுவதும் வாக்குவங்கி வைத்துள்ள எங்களுக்கு அதைவிடக் குறைவான சீட்டா?' என்று தே.மு.தி.க தரப்பில் பொங்கிவிட்டார்களாம்!"

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

"விஜயகாந்த் ஓடியாடி 'ஆக்டிவ்' ஆக இருந்திருந்தால், கண்டிப்பாக அதிக சீட் கிடைத்திருக்கும்!"

"அது தே.மு.தி.க-வினருக்கும் புரிந்திருக்கிறது.அதனால்தான், 'சீட் பிரச்னையைத் தாண்டி எங்களுக்கு நிதி நெருக்கடியும் இருக்கிறது. அதற்கும் அ.தி.மு.க தரப்பில் சரியான பதில் இல்லை' என்று புலம்பினாராம் சுதீஷ்...

- அதிமுக கூட்டணி விவகாரங்கள் குறித்த ஒவ்வொரு நகர்வையும் உள்புகுந்து திரட்டிய தகவல்களை 'அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்!' என நமக்குத் தந்திருக்கிறார் மிஸ்டர் கழுகு.

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

திங்கள் அன்று காலை அன்புமணி வீட்டுக்கு வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் வந்துள்ளார்கள். அவர்களிடம் ராமதாஸின் பத்து கோரிக்கைகள்கொண்ட பட்டியலைக் கொடுத்துள்ளனர். அதில் மதுவிலக்கு உள்ளிட்ட சில விஷயங்களைப் பார்த்து அதிர்ந்த அமைச்சர்கள், இதை இப்போது அமல்படுத்த முடியாது என்பதைத் தயக்கத்துடன் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். "நீங்கள் முதல்வரிடம் பேசிவிட்டு வாருங்கள்" என்று ராமதாஸ் சொல்லியுள்ளார். அவர்களும் கிளம்பிச்சென்று முதல்வரிடம் பேசிவிட்டு மீண்டும் அன்புமணி வீட்டுக்கு வந்துள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தை மதியம் மூன்று மணிவரை நடந்துள்ளது. அப்போதும் தி.மு.க தரப்பிலிருந்து ராமதாஸைத் தொடர்புகொண்டு, "அய்யாவைச் சந்திக்கத் தளபதி விரும்புகிறார். கூட்டணி இல்லை என்றாலும் பரவாயில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருக்கும்" என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், அதற்கும் ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை...

- ஆளும்கட்சியைக் கடுமையாக எதிர்த்துவந்த நிலையில், நியாயமாகப் பார்த்தால் தி.மு.க பக்கம்தான் பா.ம.க போயிருக்க வேண்டும். ஆனால், அதிரடித் திருப்பமாக டாக்டரை அ.தி.மு.க பக்கம் கொண்டுவந்ததன் பின்னணியில் மூன்று பேர் பிரதானமாக இருந்துள்ளார்கள்... அப்படி என்னதான் நடந்தது என்பதை விரிவாக நமக்குச் சொல்கிறது, 'விடாது துரத்திய தி.மு.க.... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...  - இலையோடு மாம்பழம் இணைந்தது இப்படிதான்!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை.

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

"சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற்று உயர்சாதி என்கிற வட்டத்துக்குள் வந்துவிட்டாலே சாதிப்பாகுபாடு, மதப்பாகுபாடு, தீண்டாமைச்சுவர், ஆணவக்கொலைகள் எல்லாம் நீங்கிவிடுமா என்ன? அப்படி நீங்கிவிடும் என்றால், இதைவிட வேறு சுலபமான தீர்வு இருக்கமுடியாதே"

- 'வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இரட்டைமலை சீனிவாசன் பேட்டை, கதவு எண் 25 என்ற முகவரியில் வசிக்கும் திருமதி ம.ஆ.சிநேகா, க/பெ கி.பார்த்திபராஜா என்பவர், எந்த சாதி மற்றும் மதம் அற்றவர் என்று சான்றளிக்கப்படுகிறது.' - வட்டாட்சியர், திருப்பத்தூர். இந்த இரண்டு வரிச் சான்று நம் மொத்த சமூகத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. ஒருபக்கம் சாதி, மதம் பெருமை பேசும் கட்சிகள் அனலில் தகிக்கின்றன. மறுபக்கம் பாராட்டுகளைக் குவிக்கிறார்கள் மக்கள். டீக்கடை தொடங்கி சமூகவலைதளங்கள்வரை இதே விவாதம்தான். அதேசமயம், 'உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். இதன் எதிர்விளைவுகளையும் சேர்த்தே சிந்தியுங்கள்' என்கிற பக்குவமும் அக்கறையும் கவலையும் கொண்ட சமூகநீதிக்கான குரல்களும் எழுகின்றன. இதை ஆழமாக நோக்குகிறது 'சாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா?' எனும் சிறப்புக் கட்டுரை. 

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, பேராசிரியை நிர்மலாதேவி விவகாரமும் சூடு கிளப்பத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், அதிகாரத்தின் கரங்கள் நீள்கின்றனவோ என்ற சந்தேகம் இயல்பாகவே மக்களிடம் உருவாகியுள்ளது. தவிர, "நிர்மலாதேவியைச் சிறைக்கு உள்ளேயே சாகடிக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார்" என்று நிர்மலாதேவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ள தகவல், இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

இதுவரை சிறைக்கும் நீதிமன்றத்துக்கும் அமைதியாக வந்துசென்றுகொண்டிருந்த நிர்மலாதேவி, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது, உடன் வந்த பெண் காவலர்கள், அவரது வாயைப் கைகளால் பொத்தி வலுக்கட்டாயமாக மூடிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.

- மடியில் கனம் இல்லாதவர்கள் எதற்காக இப்படி பயந்து நடுங்கி நிர்மலாதேவியை முடக்கவேண்டும்? வானாளவிய அதிகாரம் கொண்டவர்கள் பயந்து நடுங்குவது எதற்காக? என்ற கேள்விகளுடன் சில நிலவரத்தைப் பதிவு செய்திருக்கிறது 'நிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்?' எனும் செய்திக் கட்டுரை.

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

'எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே' என்பதுபோல, 'எல்லா மோசடிகளும் கொங்கு மண்டலத்தில் இருந்தே' என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்வில் கும்மியடிக்காத மோசடிகளே இல்லை. மண்ணுளிப் பாம்பு தொடங்கி, நாகரத்தினக்கல், ரைஸ் புல்லிங், ஈமுக்கோழி, நாட்டுக்கோழி, நிலமோசடி என டிசைன் டிசைனாகக் கடை விரித்தாலும், பணத்தை இழந்து கண்ணீர் சிந்துவதே பலருக்கும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது!

அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறது நகை முதலீட்டு மோசடி. 'ஸ்கிராப் கோல்டு எனப்படும் பழைய தங்க நகையை எடுத்துத் தொழில் செய்துவருகிறோம். பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்' என டி.வி., பத்திரிகைகளில் கலர்கலராக விளம்பரம் கொடுத்தது, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட 'முல்லை ஜூவல்லர்ஸ்'. கோயம்புத்தூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் எனப் பல இடங்களில் கிளையைத் திறந்து, சுமார் ரூ.500 கோடி வரை சுருட்டியிருக்கிறது இந்த முல்லை ஜுவல்லர்ஸ். மக்கள் முதலீடு செய்த பணத்திலிருந்தே இரண்டு மாதங்களுக்குப் பணம் கொடுத்து நம்ப வைத்திருக்கிறார்கள். நகை, வீடு எல்லாவற்றையும் அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் முதலீடு செய்தவர்கள், 'எப்படியாவது எங்கள் பணத்தை மீட்டுத்தாருங்கள்' எனக் கண்ணீரோடு ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளித்துவிட்டுப் பரிதாபமாகக் காத்துக்கிடக்கிறார்கள்.

- இந்த மோசடியின் பின்னணியையும், கள நிலவரத்தையும் அப்படியே பதிவு செய்திருக்கிறது 'மேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்... 500 கோடி மக்கள் பணத்தை அமுக்கிய நகைக்கடை' எனும் செய்திக் கட்டுரை.

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

"பா.ம.க-விலிருந்து நீங்கள் வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன?"

"எட்டு ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்துவந்த நான், 'இந்தியாவிலும் சிங்கப்பூர் போன்ற நேர்மையான அரசியலைக் கொண்டுவர வேண்டும்' என்ற சேவை நோக்கத்துடன்தான் தாயகம் திரும்பினேன். 'கொள்கைப் பிடிப்பில்லாத, ஊழல் கட்சிகளான திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்' என்று சொல்லிவந்த பா.ம.க-வை நம்பி, அந்தக் கட்சியில் இணைந்தேன். இப்போது, அவர்களும் மற்றக் கட்சிகளைப்போல சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டார்களே என்ற விரக்தியில், கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். இதுதான் உண்மை!"

- அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி கையெழுத்தானதைத் தொடர்ந்து பா.ம.க-விலிருந்து வெளியேறியிருக்கிறார், அந்தக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ராஜேஸ்வரி பிரியா. பிப்ரவரி 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இவர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ராமதாஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். "வார்த்தை தவறிவிட்டார் ராமதாஸ்!" எனும் அவரது பேட்டியில் தனது முழுமையான அரசியல் பார்வையை விளக்கியிருக்கிறார்.

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

> "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை புகாரில் உண்மை இல்லை" - கையூட்டு தடுப்புப் பிரிவு. 

"எடப்பாடி பழனிசாமி ரொம்ப நல்லவராம், லஞ்சமே வாங்கமாட்டாராம். அப்படியா... அதைச் சொன்னது யாரு. வேற யாரு... அவரே தான் சொல்லிக்கிட்டாரு!"

> "காவல்துறையையும், நீதித்துறையையும் அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாமீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுவருகிறோம்" - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

"இந்த விஷயத்தில் உங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது கருப்புக் கோட் போட்ட ஹெச்.ராஜாவாமே... உண்மையா?"

- இது சாம்பிள்தான்.

"கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில், மற்ற யாரையும்விட நான் தெளிவாக இருக்கிறேன்" என்று சொன்ன பா.ம.க நிறுவனர் ராமதாஸ்தான், தற்போது அ.தி.மு.க-வுடன் கூட்டணி கையெழுத்தானவுடன் அதற்கு கீழ்கண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார். "மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்குமரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்." சரி, இதென்ன பிரமாதம்... கடந்த காலங்களில் அ.தி.மு.க தலைவர்கள் விடுத்த அறிக்கைகளுக்கும், அந்தக் கட்சி தொடர்பாக வெளியான செய்திகளுக்கும் தனது டிவிட்டரில் என்னவெல்லாம் ராமதாஸ் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது 'ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!' எனும் ஆர்ட்டிகிள். 

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

"கொள்கையில் தேக்கு மரமாகவும், கூட்டணியில் நாணலாகவும் பா.ம.க இருப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளாரே?"

"பா.ம.க-வுக்கும் கொள்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் 'தேக்கு மரம்' என்று சொல்லும்போதுகூட அவரது சிந்தனை 'மரம்' பற்றியே இருக்கிறது. மரத்தை வெட்டி அரசியல் செய்தவர், அதைப்பற்றிதானே பேசுவார். ராமதாஸின் ஒரே கொள்கை, அதிகாரத்தில் இருக்க வேண்டும், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே. இன்று சனாதனக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். ராமதாஸின் கொள்கையும் அதுதான்."

- " 'வன்முறை முகம் கொண்ட தீயசக்தி' என ஜெயலலிதா அடையாளம் காட்டிய ராமதாஸைக் கூட்டணியில் சேர்த்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது அ.தி.மு.க" என்ற கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. அவரது சுருக்கமான பேட்டிதான் "அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்!".

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

கனிமொழி: "பல போராட்டங்களையும், சிக்கல்களையும் தாண்டித் தைரியத்தோடு போராடியதால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கும் திறனே அவரது வெற்றிக்கு உதவியது."

குஷ்பு: "ஜெயலலிதாவை , ஒரு one woman army-னுதான் நான் சொல்வேன், ஒரு பெண்ணாக தமிழகத்துல அவங்க எட்டிய உயரம் ரொம்பப் பெரிசு."

தமிழிசை சௌந்தர்ராஜன்: "ஒரே நேரத்தில் கரும்பாகவும், இரும்பாகவும் இருந்தவர் ஜெயலலிதா, அவர் இறுக்கமானவர்னு ஒரு பிம்பம் இருக்கு. உண்மையில் தோழமையுடன் பழகக்கூடியவர்."

ஜோதிமணி: "ஆண்களின் உலகம் என்று நம்பப்படும் அரசியலில், பெண்கள் வருவதே கடினம், ஆனால் அதில் தலைமைப் பொறுப்பில் பல ஆண்டுகள் தன்னைத் தக்க வைப்பதற்கான அசாத்தியத் தைரியமும், திறமையும் அவரிடம் இருந்தன."

பாலபாரதி: "அரசியல் தாண்டி ஜெயலலிதாவைப் பார்ப்பது சாத்தியமல்ல. ஏனென்றால், அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. முழுக்க முழுக்கத் தன்னை அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்."

வானதி ஸ்ரீநிவாசன்: "அரசியலில் மட்டுமல்லை; ஒட்டுமொத்தப் பெண்கள் சமுதாயமே அவரை ஒரு எடுத்துக்காட்டாகப் பார்த்தது. படித்த பெண்களைத் தாண்டி, சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் அடித்தட்டு பெண்கள்கூட, அவரை அதிகமாக நேசித்தனர்."

- மறைவுக்குப் பின்னும், இந்திய அரசியலில் ஜெயலலிதாவின் பெயர், தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி 24) முன்னிட்டு அவர் குறித்து தமிழக அரசியல் பெண் தலைவர்கள், தங்கள் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்... அதன் தொகுப்புதான் "கரும்பும் அவரே... இரும்பும் அவரே!" எனும் சிறப்புப் பார்வை. 

கூட்டணியும் 'பின்னணி'யும்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 10 தெறிப்புகள்!

எந்தத் தொழில் படிப்பும் கிடைக்காத பட்சத்தில் சட்டக் கல்லூரியில் படிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. சட்டக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அக்கல்வி மீது ஆர்வம் உள்ளதா என்கிற சோதனைகூட செய்யப்படுவதில்லை. இது தவிர, சட்டப் பல்கலைக்கழகங்கள் இரண்டுமே வெளிநாட்டில் வாழும் இந்தியரின் உறவினர்கள் என்ற ஒதுக்கீட்டின்கீழ் பல உள்ளூர் நபர்களை பணம் பெற்றுக்கொண்டு சேர்த்திருப்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. முன்னாள் துணைவேந்தர் ஒருவர்மீது இதுதொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தால்தான் துணைவேந்தர் பதவி என்பது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தனது டாக்டர் பட்டத்துக்காக சமர்ப்பித்த ஆய்வுரை 88 சதவிகிதம் காப்பியடித்தது அம்பலமானப் பின்பு, அவர் அந்தப் பதவியிலிருந்து துரத்தப்பட்டதும் நினைவுக்கு வருகிறது...

-  தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பணியாற்றிய டி.சங்கர் தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ம் தேதி நடந்தது. இதில் நீதிபதிகள், "சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என்று எங்களுக்கும் தெரியும். தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து, துணைவேந்தர் கட்சிக்காரரைப் போல செயல்படுகிறார். இதுகுறித்து எங்களை ஏதும் பேச வைக்காதீர்கள்" என்று கடுமையாக விமர்சனத்தைப் பதிவுசெய்திருந்தனர். அதையொட்டி முன்னாள் நீதிபதியான கே.சந்துரு எழுதியிருக்கும் 'சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?' எனும் கட்டுரை மிக முக்கியமானது. 

ந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2ItU