Published:Updated:

`மோடிக்கு ஓட்டுபோடுவது உங்கள் குடும்பத்தை நீங்களே கொளுத்துவது போல!' - வைகோ

`மோடிக்கு ஓட்டுபோடுவது உங்கள் குடும்பத்தை நீங்களே கொளுத்துவது போல!' - வைகோ
`மோடிக்கு ஓட்டுபோடுவது உங்கள் குடும்பத்தை நீங்களே கொளுத்துவது போல!' - வைகோ

மோடிக்கு ஒரு வாக்கு கூட சென்று விடக் கூடாது, அப்படி சென்றால் அது உங்கள் குடும்பத்திற்கு நீங்களே தீ வைத்து கொளுத்துவது போன்றது. மோடி தலைமையிலான அரசு மீண்டும் வரக் கூடாது. இந்த அழிவையும், ஆபத்தையும் வர விடமாட்டோம். இதை நான் தமிழகத்தின் கடைசி ஊழியனாக இருந்து கேட்கிறேன். நம்மை விலைக்கு வாங்க ஒரு கூட்டம் தயார் ஆகி விட்டது. அந்த நாசகார கூட்டத்திற்கு நாம் அடிபணிந்து விடக் கூடாது என தஞ்சாவூர்   நடைபெறும்  திக மாநாட்டில் கலந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
 

தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் வீரமணி தலைமையில் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. காலை தொடங்கிய மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில் வைகோ, வைரமுத்து உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். மேடையில் பேசிய வைகோ, சுயமரியாதையே எனது பிறப்புரிமை என முழக்கமிட்டவர் தந்தை பெரியார். அந்த முழக்கத்தை இந்த தஞ்சை மண்ணில் 1926 ஆம் ஆண்டில் எழுப்பினார். சுயமரியாதைதான் சமத்துவத்தை அளிக்கும். அதன் மூலம், அன்னிய ஆதிக்கம் அகலும். சுயராஜ்ஜியம் தானாக வரும் என்பதுதான் அவர் வலியுறுத்திய கருத்து. இந்தச் சமுதாயம் விடுதலை அடையச் செய்ய வந்தவர் தந்தை பெரியார். ஈராயிரம் ஆண்டுகளில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தச் சிலர் வந்தனர். அவர்களில் பலர் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால், பெரியார் மட்டும்தான் நிலைத்து நின்று போராடியவர்.

பெரியார், அண்ணா, கருணாநிதி காலத்தில் வராத ஆபத்து மிகக் கொடுமையாக வடமாநிலத்திலிருந்து வருகிறது. பாசிசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பிரதமர் மோடி இருக்கிறார். மோடிக்கு ஒரு வாக்கு கூட சென்று விடக் கூடாது.அப்படி சென்றால் அது உங்கள் குடும்பத்திற்கு நீயே தீ வைத்து கொளுத்துவது போன்றது. உங்கள் பேரக்குழந்தைகளுக்கு நீயே கொள்ளி வைப்பது போன்றது. உத்திர பிரதேச மாநிலத்தில் காந்தியடிகள் பொம்மை சுடப்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்து மோடி சிரியா மாநாட்டில் பேசாமல் பருவநிலை மாற்றம் குறித்து பேசியது வருத்தம் தருகிறது.

இந்த மண்ணை பெட்ரோலிய மண்டலமாக்க முயற்சி செய்கிறது மத்திய அரசு. இங்குள்ள நிலத்தை கார்பரேட் நிறுவனங்கள் சில லட்சங்கள் கொடுத்து வாங்கி, கோடிக்கணக்கான ரூபாயைக் கொண்டு செல்ல இருக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை அதிபருக்கு இரு ஒப்பந்தங்களைக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதை விட துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. சமூக நீதிக்குக் கொள்ளி வைக்கும் விதமாக மீத்தேன், நியுட்ரினோ திட்டத்தைக் கொண்டு வருகிறதுமத்திய அரசு. எனவே, மோடி தலைமையிலான அரசு மீண்டும் வரக் கூடாது. இந்த அழிவையும், ஆபத்தையும் வர விடமாட்டோம். இதை நான் தமிழகத்தின் கடைசி ஊழியனாக இருந்து கேட்கிறேன்.

நம்மை விலைக்கு வாங்க ஒரு கூட்டம் தயார் ஆகி விட்டது. அந்த நாசகார கூட்டத்திற்கு நாம் அடிபணிந்து விடக் கூடாது. வரும் காலம் நமது காலம். எனது அண்ணன் கலைஞரிடம் காதில் போய் சொன்னேன். உங்களுடன் எப்படி 29 ஆண்டுகள் இருந்தது போல் தம்பி ஸ்டாலினுடன் இருப்பேன் என்று கூறினேன்.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கிறோம். இந்த அணி வெல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்த அணி வெல்லும்.இந்த மண்ணைக் காக்க, திராவிடத்தைக் காக்க, தமிழகத்தைக் காக்க இந்த மாநாட்டில் சபதம் ஏற்போம். சூளுரைப்போம்'' என்றார்.