Published:Updated:

அ.தி.மு.க கூட்டணிக்கு கிருஷ்ணசாமி போட்ட கன்டிஷன் - பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி

அ.தி.மு.க கூட்டணிக்கு கிருஷ்ணசாமி போட்ட கன்டிஷன் - பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி
அ.தி.மு.க கூட்டணிக்கு கிருஷ்ணசாமி போட்ட கன்டிஷன் - பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி

தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்கு வங்கியை கைப்பற்ற அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணி தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் இருவருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தாமரை, இரட்டை இலை இந்த இரண்டு சின்னத்தில் ஆளுக்கு ஒன்றில் நிற்கவேண்டும் என்பது நிபந்தனை. இதற்கு சம்மதித்தால், கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. அதேபோல், ஜான்பாண்டியனிடம் நாகை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நிற்கமுடியுமா? என்று சாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சில நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் ஜான்பாண்டியன் சந்தித்து பேசியதாக செய்தி உலவுகிறது. 

ஆனால், கிருஷ்ணசாமியின் நிபந்தனை வேறு மாதிரியாக இருக்கிறது. 'சுயேட்சை சின்னத்தில் மட்டுமே நிற்பேன். தென்காசி தவிர, காலியாக இருக்கும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியைத்தரவேண்டும்' என்கிறார். அதேநேரம், ஜான்பாண்டியன், 'வேறு எங்கும் சீட் வேண்டாம்...தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி தந்தால் பரிசீலிக்கலாம்' என்கிறாராம். இதனால், பேச்சுவாத்தையில் இழுபறி நீடிக்கிறது. கிருஷ்ணசாமியின் நிபந்தனையை தெரிந்துகொண்ட தி.மு.க., 'சுயேட்சை சின்னத்தில் நிற்க அனுமதிக்கிறோம். இங்கே வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். ஆனால், கிருஷ்ணசாமியோ கூடுதலாக ஒட்டப்பிடாரம் தருவீர்களா? என்று பிடிவாதம் செய்கிறாராம். இதனால் அ.தி.மு.க. தரப்பினர் குழம்பி நிற்கிறார்கள்.