எஸ்.பிரேமானந்தம், காஞ்சிபுரம்.
நடிகர் அக்ஷய்குமாருக்கு அளித்த பேட்டியில் அரசியல் சார்பற்ற விஷயங்களாகப் பேசிய மோடி, தன் திருமண வாழ்க்கை பற்றி மட்டும் தவிர்த்துவிட்டாரே?

அவர் பேச நினைப்பதைத்தானே பேச முடியும்? நீங்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் பேசுவதற்கு, அது பொதுவாழ்க்கையில்லையே, சொந்த வாழ்க்கை!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.
புயல் வரும்போலிருக்கிறதே... ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சேதம் ஏதும் வருமோ?

ஆகா... புதுசா ஒரு காரணம் கிடைச்சுடுச்சா!

@கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘2,000 ரூபாய் தாள்’ பதுக்கிக்கொண்டு போக வசதியாகத்தான் இருக்கிறது இல்லையா?

நீங்கள் எந்தக் கட்சிக்கு எவ்வாறு ‘வேலை’ பார்த்தீர்கள் என்று விலாவாரியாகச் சொன்னால், எதிர்காலத்தில் அனைவருக்கும் பயன்படும்தானே!

@மிஸ்டர் மர்மம்.
ரஜினியின் தனிக்கட்சி அரசியல் குழப்பமாக இருந்த காலகட்டத்தில் அவரை வரவேற்ற விகடன், இப்போது அவர் தெளிவான முடிவு எடுத்திருக்கும்வேளையில் அவரைச் சாடுவது போலத் தெரிகிறதே?

வரவேற்பது, சாடுவது என்பதெல்லாம் அந்தந்தச் சூழலைப் பொறுத்து அமைவது. அதாவது, அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களின் அந்த நேரத்து ஆக்ஷன்களுக்கு ரியாக்ஷன்களே. இதுபோன்ற விஷயங்களில் திட்டமிட்டு எதையும் செய்வதில்லை, அதற்கான தேவையும் இல்லை. அதிருக்கட்டும்... எது குழப்பம், எது தெளிவு என்று ஒரே மர்மமாக இருக்கிறதே மிஸ்டர் மர்மம். நீங்கள் ‘மிகத் தெளிவாக’ முடிவே கட்டிவிட்டீர்களே!

@பி.ரஹீம், மதுரை-18.
‘அவர்கள்’ காலத்தில் இருந்ததைவிட, ‘இவர்கள்’ காலத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறைவுதானே?

‘அவன் பெரிய திருடன்’, ‘இவன் சின்ன திருடன்’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகின்றன!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.
நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வரவில்லையே?

‘அவருடைய பிரசார சேவை, மற்ற மாநிலங் களுக்குத் தேவை’ என்று கட்சி மேலிடம் நினைத்திருக்கலாம். ‘அவர் வந்தால், பி.ஜே.பி-க்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பல ‘வாய்க்கால் தகராறு’கள் மக்களுடைய நினைவில் நிழலாடிவிடும் என்பதால்தான் வரவில்லை’ என்று நீங்கள் நினைத்தால், அதற்கு பி.ஜே.பி பொறுப்பல்ல!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது பாலியல் புகார் சதித் திட்டத்தின் பின்னணியாகச் செயல்பட்டது யார்?

இப்போதுதான் வழக்கே வந்துள்ளது. விசாரணைக்கான உத்தரவுகள் பறக்க ஆரம்பித்துள்ளன. என்ன உண்மை என்று இனிதான் தெரியவேண்டும். அதற்குள்ளாக, ‘சதித் திட்டம்’ என்று தீர்ப்பு எழுதப் பார்க்கிறீர்களே!

@காந்தி லெனின், திருச்சி.
தேர்தல் நேரத்தில் பிரதமரின் பேட்டி விதிமீறலா?

ஏது... ஏது... வாய்க்கு ஒரு பூட்டுப்போடச் சொல்லி விடுவீர்கள் போலிருக்கிறதே!

எம்.டி.உமாபார்வதி, சென்னை.
தங்கமங்கை கோமதி?

தங்கத்துக்கு வாழ்த்துகள். இன்னும் இன்னும் தங்கங்கள் ஜொலிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், விளையாட்டுத் துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல், திறமையாளர் களைவிட பணம் படைத்தவர்களைத்தான் உயர்த்திப்பிடிக்கிறது. பணக்காரர்கள் பலருக்கும் தேவை, ‘என் மகன்/மகள் உலக அளவில் ஃபேமஸ்’ என்பதுதான். ஆனால், திறமையாளர்களுக்குத் தேவை, வெற்றி மட்டுமே. பணம் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக திறமையாளர்கள் பலரும் இங்கே முடக்கப்படுகிறார்கள். கட்சி அரசியலைவிட மிகமிகக் கொடுமையானது விளையாட்டுத் துறை அரசியல். இதன் வீரியம், அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். ‘ஜீவா’, ‘டங்கல்’ போன்ற திரைப்படங்கள், இந்த அரசியலை நார்நாராகக் கிழித்தெடுத்து, எச்சரிக்கை மணி அடித்துள்ளன. ஆனால், ஒரேயடியாகச் சாவுமணி அடிக்காதவரை, இங்கே தங்க மங்கைகள்/தங்க மகன்கள் குறிஞ்சிப் பூக்களே!

@எஸ்.பாலசுப்ரமணியன், புதுச்சேரி-5.
காங்கிரஸின் ‘ஐந்து கோடி குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்’ என்கிற வாக்குறுதியை, மலிவுவிலை உணவுப் பண்டங்களை இந்தியா முழுக்க விற்பனை செய்யும்வகையில் மாற்றினால், பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்குமே?

அதில், ‘6 லட்சம் கோடி ரூபாய் ஊழல்’ என்று சி.பி.ஐ விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்றெல்லாம் போடவேண்டியிருக்குமே!

@‘வடபழனி’ ஆர்.கே.எஸ்.மகேஷ்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரயிலில் பயணிப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட பல ரயில்கள் தாம்பரத்திலும் எழும்பூரிலும் நிறுத்தப்பட்டு, மக்கள் அவதிக்குள்ளானார்கள். சாலைகளை முடக்கிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ரயிலுக்கும் வந்துவிட்டார்களே?

இங்கே ஆட்சியில் அமர்பவர்கள், இன்னமும் ‘வெள்ளைக்கார’ ஆட்சிக்காலத்தில் வாழ்வதாகவே தங்களை உணர்கிறார்கள். அந்தப் பிரபுக்கள் போலவே நடந்துகொள்கிறார்கள். இத்தகைய வி.ஐ.பி கலாசாரம் ஒழிக்கப்படாதவரை, இதற்கெல்லாம் ஒருநாளும் விடிவே இல்லை.

டி. தண்டபாணி, திண்டுக்கல்.
‘ஜூன் 3-ம் தேதியன்று ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என தி.மு.க-வினர் காணும் கனவு பலிப்பதற்குச் சான்ஸ் இருக்கிறதா?

22-க்கு 22 என்றால், வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், இதை எதிர்பார்த்தே சிலபல ஆயுதங்களுடன் தயாராகவே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எல்லாம் மேலிருக்கப் போகிறவன் கையில்தான் இருக்கிறது.

@ஜான் செல்வராஜ், பாலவாக்கம்.
நான் ஓட்டுப் போடவில்லை என்று வைத்துக்கொள்ளும்.என் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டார்களா அல்லது யாரும் போடவில்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

வாக்குப்பதிவு முடியும் நேரம், கடைசி ஆளாக க்யூவில் நின்றாலே தெரிந்திருக்கும்! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தித் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மனு போடுங்கள். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு தகவல் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதாவது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைந்த பிறகு கிடைக்கலாம். இதற்கு, கிட்டத்தட்ட ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
கிட்டத்தட்ட தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் என்கிற சூழலே கண்ணுக்குத் தெரிகிறது. இத்தகைய சூழலில் யார் பிரதமர் பதவியில் அமர்ந்தால் நிலையான அரசு அமையும்?

வேறு யார்... மிஸ்டர் மௌனகுருவேதான்.

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
இலங்கையில் அரங்கேறியிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்தும் உண்மை என்ன?

நியூட்டனின் மூன்றாம் விதி.

ஜெ.ஜானி, போரூர், சென்னை.
‘வாகனங்களில் கொடிகள், தலைவர் படங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதித்தால் பாதியளவு குற்றங்கள் குறையும்’ என நீதிமன்றம் கூறியது பற்றி?

ஒரு குற்றம் நடந்ததுமே... அமைச்சர்கள், வி.ஐ.பி-கள், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்கள், உயர் பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள், சாதிவெறியோடு வேலை பார்க்கும் அதிகாரிகள் போன்றோரிடமிருந்து போலீஸுக்கு பறந்துவரும் போன்களுக்குத் தடைவிதித்தால், மீதிக்குற்றங்களும் குறைந்துவிடும். காப்பாற்ற ஆளில்லை என்கிற பயத்தில் குற்றம்செய்ய பயப்படவாவது செய்வார்கள்.

@லி.சீனிராஜ், தொம்பக்குளம், விருதுநகர் மாவட்டம்.
‘உச்சியில் ஏறி பாபர் மசூதியை இடித்தவர்களில் நானும் ஒருவர்’ என பி.ஜே.பி-யின் போபால் தொகுதி வேட்பாளர் சாத்வி பிரயாக் பறைசாற்றியிருக்கிறாரே?

இவருக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும்.

@வெங்கட்.கே.
இன்றைய தமிழக காவல்துறைக்கு உடனடியாகத் தேவைப்படுவது எது?

நல்ல ஈரல்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!