Published:Updated:

ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை

ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை
ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை
ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை

தர்மபுரி: பா.ம.க. தலைவர் ராமதாஸ் அறுவை சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி மாவட்ட பா.ம.க. சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் இருதய பாதிப்பு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டாக்டர்களின் ஆலோசனைப்படி இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது. இந்த அறுவை சிகிச்சை வெறிகரமாக நடந்து முடியவும், அவர் நலமுடன் வீடு திரும்பவும் தர்மபுரியில் பா.ம.க.வினர் வேண்டிக் கொண்டு தர்மபுரி சாலை வினாயகர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோயில், கோட்டை பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

முன்னாள் எம்.பி. செந்தில், மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் சாந்த மூர்த்தி ஆகியோரது ஏற்பாட்டில் நடந்த இந்த பூஜையில் நிறைய பா.ம.க. தொண்டர்கள் கலந்து கொண்டு நெக்குருகி வழிபட்டனர்.

##~~##
இது தவிர மாவட்டதின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பா.ம.க.வினர் ஆங்காங்கே உள்ள உள்ளூர் கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தி பிரார்தித்து வருகின்றனர்.
எஸ்.ராஜாசெல்லம்