Published:Updated:

`ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!' - தயாநிதி மாறன்

`ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!' - தயாநிதி மாறன்
`ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!' - தயாநிதி மாறன்

`ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'' என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.

இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு, சென்னை பெரம்பூர் ஃபேரக்ஸ் சாலையில் தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன்,  சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது பேசிய தயாநிதி மாறன், ``இந்தியாவின் எதிர்கால வழிகாட்டியாக இருப்பவர் ஸ்டாலின். ஜனநாயகத்தை காப்பதற்காகச் சிறைசென்றவர்.

ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர். கருணாநிதிக்கு பெருமை தேடித் தந்தவர் அவர். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் ஆட்சியாளர்கள் சதிசெய்தனர். சட்டப்போராட்டம் மூலமாக வெற்றிபெற்று, இடத்தை வாங்கினார் ஸ்டாலின். பெண்களுக்காக சுய உதவிக்குழு திட்டத்தை இந்தியாவிலேயே, முதன்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தியவர் கருணாநிதிதான்.

தமிழகப் பெண்களை, ஒரு தந்தையாய் இருந்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவரும் அவரே. ஜெயலலிதா சிறை சென்றபோது அழுதுகொண்டே பதவி ஏற்றவர்கள், அவர் இறந்த பின் சிரித்துக்கொண்டே பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் மருத்துவ மாணவர்களின் கனவை தவிடுபொடியாக்கியது. கிராமத்து மக்கள்யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதுதான் ஆட்சியாளர்களின் விருப்பம். தேர்தல் நேரத்தில் பணத்தைக்கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது அ.தி.மு.க அரசு. இடைத்தேர்தல் நடக்கவுள்ள 21 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெற்றால், ஸ்டாலின் முதல்வராவார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த இந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்'' என்றார்.