Published:Updated:

சீட்டுக்காக காங்கிரஸார் போட்டி போட்டு ஜோதி பயணம்

சீட்டுக்காக காங்கிரஸார் போட்டி போட்டு ஜோதி பயணம்
சீட்டுக்காக காங்கிரஸார் போட்டி போட்டு ஜோதி பயணம்

ராமநாதபுரம்: ராகுலின் பார்வை தங்கள் மீது பட்டு, தேர்தலில் எப்படியாவது சீட்டு வாங்கிவிட வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸார் ஜோதி பயணத்தை தொடங்கியுள்ளனர்.

சீட்டுக்காக காங்கிரஸார் போட்டி போட்டு ஜோதி பயணம்

ரோம் நகரம் தீ பிடிச்சு எரிந்த போது, பிடில் வாசித்து கொண்டிருந்த நீரோ மன்னனின் செயல் போல் உள்ளது தமிழகத்தில் காங்கிரஸார் நடத்தும் கூத்துகள். வர இருக்கின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீதான தங்களின் அதிருப்தியை வெளிக்காட்ட காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ, போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் தங்களுக்கு மக்கள் தங்க தட்டில் வைத்து வெற்றியை தர காத்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் ராஜீவ்காந்தி இறந்து 22 ஆண்டுகளுக்கு பின் அவரது பெயரில் ஊருக்கு ஊர் ஜோதி எடுத்து கொண்டு சீட்டுக்காக திரிகிறார்கள்.

##~~##
ராகுலின் பார்வை தங்கள் மீது படவேண்டும் என்பதற்காக ராஜீவின் பெயரில் ஜோதி எடுத்து செல்லும் வழக்கத்தை கடந்த வருடம் அரியலூரில் ஆரம்பித்து வைத்தார் சிதம்பரம் தொகுதியை எதிர்பார்த்து ஏமாந்த மணிரத்தினம். இந்த வருடமும் மணிரத்னம் ஜோதி பயணம் மேற்கொண்டிருக்கும் அதேவேளையில், அவரை தொடர்ந்து இப்போது ராமநாதபுரம் தொகுதியிலும் ஜோதி எடுத்து கிளம்பிவிட்டனர்.
இளைஞர் காங்கிரஸின் முன்னாள் துணை தலைவரும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளருமான ஆம்ஸ்ட்ராங் ‘தீவிரவாத எதிர்ப்பு ஜோதி’ என்ற பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து ராஜீவ் நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு புறப்பட்டு சென்றார். இந்த ஜோதியினை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் வாசனின் ஆதரவாளருமான ரவிச்சந்திரராமவன்னி துவக்கி வைத்தார்.

சிதம்பரம் ஆதரவாளர்கள் நடத்தும் இந்த ஜோதி பயணத்தில் வாசனின் ஆதரவாளர்களான சோ.பா.ரங்கநாதன், பாரிராஜன், இளங்கோவனின் ஆதரவாளர் வேலுச்சாமி மற்றும் சோ.பா.ரவி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபா செந்தில், டேனியல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி.