Published:Updated:

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

தலைமுறை கடந்த தலைமகன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தலைமுறை கடந்த தலைமகன்கள்!

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

Published:Updated:
தலைமுறை கடந்த தலைமகன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தலைமுறை கடந்த தலைமகன்கள்!

ள்ளாத வயதில் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்கிற நிலையிலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக் கடமையை ஆற்றியிருக்கிறார்கள், தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமைகளான பேராசிரியர் க.அன்பழகனும், தோழர் என்.சங்கரய்யாவும். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா ஆகிய இருவருக்கும் 97 வயது நடந்து கொண்டிருக்கிறது. அன்பழகனைவிட சங்கரய்யா வயதில் ஆறு மாதங்கள் மூத்தவர். இருவரும் இப்போது எப்படி இருக்கிறார்கள்?

தோழர் சங்கரய்யா

சு
தந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர் சங்கரய்யா. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும்கூட நீண்டகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் தொடங்கி தற்போது நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை அத்தனை தேர்தல்களிலும் வாக்களித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு.

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீண்ட காலம் தமிழக அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சங்கரய்யா, முதுமை காரணமாக நேரடியான அரசியலைக் குறைத்துக்கொண்டார். நாம் சென்றபோது, வீட்டு வாசலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து லென்ஸ் உதவியுடன் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார்.

“அப்பாவுக்கு கண்ணுல கொஞ்சம் பிரச்னை. அதனால், தொலைக்காட்சி பார்க்கிறதைக் குறைச்சிட்டார். தினமும் பேப்பர்ல தலைப்புச் செய்திகளையெல்லாம் படிச்சுடுவார். கட்டுரைகள் படிக்கிறது, புத்தகங்கள் படிக்கிறதுன்னா லென்ஸ் உதவியோட படிக்கிறார். சில நேரம் என்னையோ, பேரப்பிள்ளைகளையோ வாசிக்கச் சொல்லி கேட்கிறார். மகாகவி பாரதியார் கவிதைகள் எப்போதும் அப்பா பக்கத்திலேயே இருக்கும். வாசிப்பும், தோழர்களுடனான சந்திப்பும்தான் அப்பாவை இன்னும் உற்சாகமாக வைத்திருக்கிறது…” என்கிறார், சங்கரய்யாவின் இளைய மகன் நரசிம்மன்.

வழக்கமாகக் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்துவிடும் சங்கரய்யா, டிரான்சிஸ்டர் ரேடியோவில் அகில இந்திய வானொலிச் செய்திகளைக் கேட்டுவிட்டு, அன்றைய நாளிதழ்களை வாசிக்க ஆரம்பிக்கிறார். பிறகு, குளித்துவிட்டு, காலை உணவை முடித்து முக்கியச் செய்திகள், முக்கியக் கட்டுரைகள் என அவர் குறித்துவைத்தவற்றை லென்ஸ் உதவியுடன் முழுமையாக வாசிக்கிறார். 1 மணியளவில் மதிய உணவு. 2.30 மணி முதல் 5 மணி வரை குட்டித் தூக்கம். மாலை 5 மணிக்கு எழுந்து மீண்டும் புத்தகம் வாசித்தல், திரையிசைப் பாடல்கள் கேட்டல், வீட்டுக்கு வரும் தோழர்கள் மற்றும் உறவினர்களுடன் சந்திப்பு என்று பொழுது கழிகிறது.  ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தக வெளியீட்டுக்குச் சமீபத்தில் தடைவிதித்தபோது,  உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிவரச் சொல்லி வாசித்துவிட்டார்.

இந்த வயதிலும் மிகவும் அப்டேட்டாக இருக்கிறார். அவரது நினைவாற்றல் நம்மை  வியக்க வைக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தேதி குறிப்பிட்டுத் துல்லியமாக நினைவுகூர்கிறார். தீவிரமான கால்பந்து ரசிகரான சங்கரய்யா, சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை தினமும் இரவு முழுவதும் விழித்திருந்து பார்த்திருக்கிறார்.

மட்டன், சிக்கன், மீன் உணவுகளை அவ்வப்போது குறைவான அளவில் உண்கிறார். இட்லி, தோசை, இடியாப்பம், குழைவாக வடித்த சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற எளிதில் ஜீரணமாகிற உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார். அவ்வப்போது டீ, காபி அருந்துகிறார். ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் உட்பட கட்சித்தலைவர்கள் பலரும் அவ்வப்போது சங்கரய்யாவிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள். கட்சித் தோழர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால், சங்கரய்யாவே தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிக்கிறார். அவரது அறையில் எந்நேரமும் ஒரு மெல்லிய இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அங்கிருந்து நாம் விடைபெற்றபோது, தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

பேராசிரியர் அன்பழகன்

செ
ன்னைக் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் 2-வது தெருவில் அமைந்துள்ள அன்பழகனின் வீடு ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கிறது. மகன் உதயநிதியுடன் அன்பழகன் வீட்டுக்கு வருகிறார் ஸ்டாலின். மூக்கில் உணவுக்குழாய் பொருத்தப்பட்ட நிலையில், கட்டிலில் அன்பழகன் படுத்திருக்கிறார். ஸ்டாலினைக் கண்டவுடன் அன்பழகனின் முகம் மலர்கிறது. அன்பழகனுக்கு அருகில் சென்று, ‘நாம ஜெயிச்சிருவோம்...’ என்று சொல்கிறார் ஸ்டாலின். அதை உன்னிப்பாகக் கவனிக்க முடிந்த அன்பழகனால், பதில் பேச முடியவில்லை. ‘தாத்தா நான் பேசியதை பேப்பர்ல, டி.வி-யில பார்த்தீங்களா?’ என்று உதயநிதி கேட்கிறார். உடனே, வாழ்த்து தெரிவிக்கும் வகையில் உதயநிதியின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார் அன்பழகன்.

கடந்த சில மாதங்களில் கோல் ஊன்றி நடந்தபோதிலும் வீட்டுக்குள் நடைப்பயிற்சி, புத்தக வாசிப்பு என அவரின் அன்றாட நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் இல்லை. சக்கர நாற்காலியில் அமர ஆரம்பித்த பிறகும், குடும்பத்தினருடன் சகஜமாகப் பேசும் நிலையில் இருந்தார். கடந்த டிசம்பர் கடைசியில் உடல்நிலை நலிவடைந்தது.

“வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டிருந்த பேராசிரியருக்கு, சமீபத்தில் உணவு புரையேறிவிடும் பிரச்னை ஏற்பட்டது. அதனால், மூக்கில் குழாய் பொருத்தி, அதன் வழியாக உணவு வழங்கப்படுகிறது. எப்போதுமே அவர் எண்ணுகிற எண்ணமும், உண்ணும் உணவும் சீராக இருக்கும். அந்தந்த வயதுக்கேற்ப தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தார். மேலும், நேர்மறையான எண்ணம், நேர்மறையான வாழ்க்கை முறை கொண்டிருப்பதால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் அவருக்கு வரவில்லை. புகையிலை மெல்லும் பழக்கம் மட்டும் இருந்தது. நான் சொன்னதால், பல ஆண்டுகளுக்கு முன்பே அதையும்  விட்டுவிட்டார். இந்த வயதிலும் நினைவாற்றல் நன்றாக இருக்கிறது. தளபதி அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வது, அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது” என்கிறார், அன்பழகனின் மருமகனும் புகழ்பெற்ற இதய நிபுணருமான மருத்துவர் சொக்கலிங்கம்.

தலைமுறை கடந்த தலைமகன்கள்!

பெரும்பாலும் படுக்கையிலேயே இருக்கும் அன்பழகனை, காலையில் ஒருவர், இரவில் ஒருவர் என இரண்டு ஆண் செவிலியர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். கூடவே, ஓர் உதவியாளரும் இருக்கிறார். பகல் நேரத்தில் லேசான தூக்க நிலையில்தான் இருக்கிறார். மற்ற நேரங்களில் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கிறார்.  இப்போது காலையில் நாளேடுகளில் தலைப்புச் செய்திகளைப் பார்க்கிறார். சில செய்திகளை குடும்பத்தினர் வாசித்துக் காட்டுகிறார்கள்.

“அப்பாவுக்குத் தேவையானதை தம்பி செய்துகொடுக்கிறார். என் தங்கச்சியும் நானும் கூடவே இருந்து கவனித்துக்கொள்கிறோம். என் கணவர் டாக்டர் சொக்கலிங்கமும், தங்கை கணவர் டாக்டர் சிவராமனும் அப்பாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்கிறார்கள். டிசம்பர் மாதம் வரை புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அவரது அறை முழுக்க புத்தகங்கள் இருக்கும். ஒரு புத்தகத்தின் பெயரைச் சொன்னால், ‘அந்த ரேக்ல ரெண்டாவது வரிசையில இருக்கு பார்’ என்பார். புத்தகங்களை, அவரே அடுக்குவார். பக்கத்தில் ஆள் இருந்தாலும், அவர்தான் எடுப்பார், அடுக்குவார். அது அவருக்கு அவ்வளவு இஷ்டம். இப்போது அவர் புத்தகங்கள் படிப்பதில்லை. உடல்நிலை சரியில்லாமல் போனபிறகு அந்த அறையில் புத்தகங்களைக் குறைத்துவிட்டோம்” என்கிறார், அன்பழகனின் மகள் செந்தாமரை.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைக் கடைசியாகப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிகவும் அப்செட்டாக இருந்திருக்கிறார் அன்பழகன். கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகு அவர் பேசுவது குறைந்துவிட்டது என்கிறார்கள் அவரின் குடும்பத்தினர். தனக்கு தேவையானவற்றை சைகையால் கேட்கிறார். தி.மு.க-வின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் ஒப்புதலுடன்தான் கழகத்தின் முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியாகின்றன. படுத்தபடுக்கையிலும் கழகப்பணி ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார்.

நுாறாண்டுகள் வாழட்டும் இந்த ஆளுமைகள்!

ஆ.பழனியப்பன், படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism