Published:Updated:

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

Published:Updated:
கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தனது அதிரடி நடவடிக்கைகளால் அனல் கிளப்பிவந்த துணை நிலை கவர்னர் கிரண்பேடியின் தலையில் குட்டுவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

அரசு கோப்புகளை ஆய்வுசெய்தது, அமைச்சரவையின் திட்டங்களைத் திருத்தங்கள் போட்டுத் திருப்பி அனுப்பியது, பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமனம் செய்தது... என்று புதுச்சேரி அரசியலில் புகுந்து விளையாடியவர் கிரண்பேடி. இதில் ரொம்பவே பாதிக்கப்பட்டவர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிதான்.

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

கவர்னரின் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முதல்வர் நாராயணசாமியின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், “அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின்படிதான், யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை கவர்னர் செயல்பட முடியும். அவருக்கென பிரத்யேகமான சிறப்பு அதிகாரம் எதுவும் யூனியன் பிரதேச சட்டத்தில் வழங்கப்படவில்லை. சட்டப் பேரவையைத் தாண்டிய உயர்ந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை. அமைச்சரவைக்கும் கவர்னருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலில், பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடிக்க முடியாது. அவற்றை குடியரசுத் தலைவருக்குத்தான் அனுப்பிவைக்க வேண்டும். யூனியன் பிரதேச விதிகளின்படி குறிப்பிட்ட சில அதிகாரங்கள் மட்டுமே கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அந்த அதிகாரங்களைக்கொண்டு அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ, தலையீடு செய்யவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக அரசை நடத்தவோ துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. எனவே, சட்டப் பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடுசெய்து, கவர்னரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி, அவருக்குச் சிறப்பு அதிகாரம் அளித்து, மத்திய அரசு 2017-ல் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளும் செல்லாது” என்று அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஆர்.மகாதேவன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரண்பேடிக்கு கிடுக்கிப் பிடி! - இது புதுச்சேரி கலாட்டா

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து உற்சாகமாக இருக்கும் முதல்வர் நாராயணசாமி நம்மிடம், “ஜனநாயகம் வென்றிருக்கிறது. எங்களின் மூன்று ஆண்டுகள் தொடர் போராட்டத்தால் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தனக்குத்தான் அதிகாரம் என்று ஆணவத்துடன் வலம்வந்த கவர்னரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்தத் தீர்ப்பு வழிவகை செய்திருக்கிறது” என்றார்.

ஆனால், இவ்வளவு நடந்தும் அசராத கிரண்பேடி, ‘முதல்வர் தலைமையில் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் இயங்க யூனியன் பிரதேச நிர்வாகிக்கு அதிகாரம் உண்டு’ என்று கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு நகலை வாட்ஸ்அப் வழியாகப் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிவைத்து, கூலாக வலம்வருகிறார்.

எல்லாம் சரி... இந்த வழக்கில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ சார்பில், ஆஜரான வழக்கறிஞர் யார் தெரியுமா? முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம்!

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism