Published:Updated:

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!
மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நான்கு பக்க அறிக்கையுடன் அறைக்குள் நுழைந்த கழுகாரிடம், ‘‘அறிக்கையை நாங்களும் படித்துவிட்டோம். ‘பி.ஜே.பி-க்குப் போவதாக உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியதாகக் கொந்தளித்திருக்கிறார்’ பன்னீர்செல்வம். ‘ஜெயலலிதா என்மீது வைத்த நம்பிக்கைக்கும் அவருடைய தொண்டர்களின் அளவற்ற பாசத்துக்கும், நானும் என் வம்சாவளிகளும் எத்தனை தலைமுறைக்கும் நன்றிக்கடன் செலுத்தினாலும் போதாது. என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க கொடி என் உடல்மீது போர்த்துவதையே என் லட்சியமாக வைத்து வாழ்கிறேன்’ என்கிற உருக்கமான வரிகளைப் பார்த்தீரா... இப்போது என்ன சொல்கிறீர்?’’

‘‘வாரணாசியில் தன் குடும்பத்தினருடன் பியூஷ் கோயலை அவர் சந்தித்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதே பன்னீர்செல்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான். இதன் மூலம், ‘குடும்பத்துடன் நாங்கள் பி.ஜே.பி–க்கு நெருக்கமாக இருக்கிறோம்’ என்று தனது அரசியல் எதிரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க நினைத்தார் பன்னீர்செல்வம். ‘இனியும் என்னை ஒதுக்கினால் எதுவும் நடக்கும்’ என்பதுதான் அவர் விடுக்க நினைத்த எச்சரிக்கை. ஆனால், அதை அவருடைய அரசியல் எதிரிகள் வேறுமாதிரி கசியவிட்டுவிட்டார்கள் என்கிறார்கள். இதனால், கொந்தளித்துக்கிடக்கிறது பன்னீர்செல்வம் முகாம்.’’

‘‘தங்க தமிழ்ச்செல்வன்தானே முதன்முதலில், ‘பன்னீர்செல்வம் பி.ஜே.பி–க்குப் போகப் போகிறார்’ என்று பேட்டி தட்டினார்?’’

‘‘டெல்லியில் நடந்த சந்திப்பு பற்றி தகவல்களைச் சேகரித்து பன்னீருக்கு எதிராக பெரும் சர்ச்சையைக் கிளப்ப தினகரன் திட்டமிட்டிருந்தார். அதன் விளைவுகளே இவை. ஏற்கெனவே, கட்சிக்குள் தனக்கு எதிராக சதிகள் நடக்கும் நிலையில், இதுபோன்ற தகவல்களால் தனது இமேஜ் மேலும் பாதிக்கும் என்றுதான் அவசரமாக அறிக்கையை வெளியிட்டார் பன்னீர்செல்வம்!’’

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்னவாம்?’’

‘‘எடப்பாடியால்தானே பன்னீர்செல்வம் இப்படிப் புலம்பும் நிலைக்கு வந்திருக்கிறார்... அதனால், அவர் ரசிக்கத்தானே செய்வார்? பன்னீர்செல்வம் - கோயல் இடையே நடந்த பேச்சுவார்த்தை பற்றி ‘மணியான’ அமைச்சருக்கு தகவல் வந்து, அவர்தான் எடப்பாடிக்கு இதை போட்டுக்கொடுத்துவிட்டாராம். பொறுமையாக இருக்கும்படி எடப்பாடி வெளியில் சொன்னாலும், இதை வைத்தே உள்ளடி செய்வதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றனவாம்!’’

‘‘பி.ஜே.பி–க்கு வருவதாக கோயலிடம் பன்னீர்செல்வம் சொல்லவே இல்லையா?’’

‘‘தனது மனக்குமுறலை மட்டும்தான் அப்போது  பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார் என்று இப்போது சொல்கிறார்கள். இப்போது, ‘இப்படியாகும் என்று தெரிந்திருந்தால், அப்போதே... இப்போது சொன்னதுபோல் சொல்லியிருக்கலாம்’ என்று இப்போது பன்னீர் தரப்பு கலங்கித் தவிக்கிறதாம்.’’

‘‘என்ன கழுகாரே கிரேஸி மோகன் ரேஞ்சுக்கு வார்த்தை விளையாட்டு நடத்திக் குழப்புகிறீர்?’’

‘‘குழப்புவது நான் மட்டும்தானா? பன்னீரின் அறிக்கையைப் பார்த்தாலே தெரியவில்லையா? ‘மனிதர் மிகவும் பதறிப்போயிருக்கிறார். பதற்றத்தில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். அறிக்கையைப் படித்துப் பாருங்கள் தெரியும். எதுவுமே இல்லாத விஷயத்துக்கு எதற்காக இத்தனை பதற்றமாக ஓர் அறிக்கை’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கேட்பதிலிருக்கும் நியாயத்தையும் மறுப்பதற்கில்லை.’’

‘‘மே 23 அன்று ரிசல்ட் எப்படி வந்தாலும் எடப்பாடியின் ஆட்சி கவிழாது என்கிறார்களே?’’

‘‘2021 வரை தனது ஆட்சியைத் தொடர்வதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கிறார் எடப்பாடி. கிட்டத்தட்ட இது இறுதி ஆட்டம் அவருக்கு. ‘ஆட்டம்’ காணும் தனது நாற்காலியை தக்கவைப்பதற்கான முன்னோட்டம்தான், மூன்று எம்.எல்.ஏ-க்களுக்குக் கொடுக்கப்பட்ட நோட்டீஸ். முதலில் ஐந்து பேருக்கு நோட்டீஸ் கொடுக்கும் திட்டம் இருந்துள்ளது. ஆனால், கடைசி நேரத்தில், ‘கருணாஸ், தமீமுன் அன்சாரிக்கு இப்போது கொடுக்கவேண்டாம்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்தே தகவல் போனதால், கட்சி எம்.எல்.ஏ–க்கள் மூவருக்கு மட்டும் நோட்டீஸ் போயிருக்கிறது. அவர்கள் இருவரும் எப்படியும் தன் பக்கம் வந்துவிடுவார்கள் என்று கணக்குப்போடு கிறாராம் எடப்பாடி.’’

‘‘மூவரும் ஒரு வாரத்துக்குள் பதில் கொடுத்துவிடுவார்களா?’’

‘‘வாய்ப்பு குறைவு... அவர்கள் இதை சட்டரீதியாகவே எதிர்கொள்வார்கள் போலிருக்கிறது. தினகரன் ஆதரவாளர் களுக்கு நோட்டீஸ் கொடுத்ததும் சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர தி.மு.க தயாராகி விட்டது.  இதைவைத்து தினகரனுக்கும் தி.மு.க-வுக்கும்  முடிச்சுப் போடுகிறார்கள். ஆனால், மூவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும்படி சபாநாயகரிடம் அ.தி.மு.க கொறடா கடிதம் கொடுத்தபோதே, ‘மூவருக்கு நோட்டீஸ் கொடுத்தால், சபாநாயகர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்’ என்று தி.மு.க சொல்லியிருந்தது. அதன்படி நோட்டீஸ் கொடுத்த அடுத்த அரைமணி நேரத்தில், தி.மு.க சார்பில் சட்டசபை செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.’’

‘‘அடுத்து என்னதான் நடக்கும்?’’

‘‘சபாநாயகர்மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அந்த மூன்று எம்.எல்.ஏ–க்கள்மீது சபாநாயகர் இப்போது நடவடிக்கை எடுக்கமுடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகர் தரப்பு வெற்றிபெற்ற பின்பே, அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். அதாவது தேர்தல் முடிவுகள் வரும்வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.’’

‘‘ஓ! தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வந்துவிடும் என்று தி.மு.க உறுதியாக நம்புகிறதோ?’’

‘‘அதை அப்புறம் பார்ப்போம்... அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்குக் கண்டிப்பாக 10 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அத்தனை தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயிப்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறாராம் எடப்பாடி. அதனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடாத அளவுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைக் காலி செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறாராம்!’’

‘‘கணக்குத் தெரியாமல், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்களையே நீக்கிவிடப் போகிறார்’’ என்று சிரித்தோம்.

‘‘நீர் சிரிப்பது இருக்கட்டும். கணக்கு வழக்குகளைப் போட்டுப்பார்த்து, சிரித்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி. அவருடைய அடுத்த அம்பு, முந்தைய இதழ்களில் நாம் விவாதித்தது போலவே தி.மு.க-வை நோக்கித்தான் நிலைகொண்டிருக்கிறது. ஒருபோதும் நாற்காலியை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி.’’

‘‘22 இடங்களிலும் தோல்வி அடைந்தால் கூடவா?’’

‘‘நல்ல கேள்வி... அப்படியே 22 இடங்களிலும் தோற்றாலும், அதையும் ஈடுகட்டுவதற்காக தி.மு.க எம்.எல்.ஏ–க்கள் 21 பேர்மீது கை வைக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி. குட்காவை சட்டசபைக்குள் எடுத்துவந்த விவகாரத்தில், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேர்மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் கோரியது சட்டசபை உரிமைக்குழு. மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவிடாமல், உடனடியாக உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியது தி.மு.க. இந்த வழக்கை வேகப்படுத்தி, தடையை உடைத்துவிடப் பார்க்கிறார் எடப்பாடி. தடை உடைந்தால், உடனடியாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை பாயும். இந்த அச்சமே, சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் காரணம் என்கிறார்கள்!’’

‘‘ஓஹோ!’’

‘‘இப்போதைய நிலவரப்படி ஐந்து எம்.எல்.ஏ-க்கள் பதவியைப் பறிக்கும்பட்சத்தில், அ.தி.மு.க சார்பில் நான்கு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றால் போதும். முதலில் மூன்று பேருக்கு நோட்டீஸ் அளித்து முன்னோட்டம் பார்த்திருக்கிறார்கள். தேர்தல் முடிவைப் பொறுத்தே ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தி.மு.க மீதும் கைவைப்பதா, வேண்டாமா என்பதை எடப்பாடி முடிவு செய்வார் என்கிறது கோட்டை தரப்பு.’’

‘‘விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்று மேடைதோறும் சீறுகிறாரே ஸ்டாலின்?’’

‘‘அவர் சீறுவதைப் பார்த்து சிரிக்கிறாராம் எடப்பாடி. குட்கா விவகாரத்தில் சிக்கிய 21 தி.மு.க எம்.எல்.ஏ–க்களில் ஸ்டாலினின் பெயரும் இருக்கிறது. சமீபத்தில் தனது வீட்டில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது ‘இன்னும் இரண்டு ஆண்டுகள், இந்த ஆட்சியை எப்படிக் கொண்டுபோக வேண்டும் என்று எனக்குத் தெரியும். சட்டசபைத் தொகுதியில் நமக்குச் சாதகமாக முடிவு வராவிட்டாலும், ஆட்சியை நம்மால் தக்கவைக்க முடியும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார். அவர் சிரிப்பின் ரகசியத்தை அறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் டென்ஷன் ஆகிவிட்டாராம். நீதிமன்றத்தில் தடையாணை உடைக்கப்பட்டுவிட்டால், உடனடியாகத் தன் எம்.எல்.ஏ பதவிக்கே வேட்டுவைத்துவிடுவார் எடப்பாடி என்கிற அச்சத்தில்தான் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசி, சட்டசபைச் செயலாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்!’’

மிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி!

‘‘அடேங்கப்பா.’’

‘‘ஆனால், ‘மத்தியில் ஆட்சி மாற்றம் வந்துவிட்டால் எடப்பாடியின் அத்தனை அஸ்திரங்களையும், தன் ஒரே பிரம்மாஸ்திரத்தில் வீழ்த்திவிடுவார் ஸ்டாலின்’ என்கிறார்கள் தி.மு.க–வினர்.’’

‘‘தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ–க்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததில், தேர்தல் விதிமுறை மீறல் ஏதும் இல்லையா?’’

‘‘அ.தி.மு.க தரப்பு, ‘இதற்கும் தேர்தல் விதிமுறைக்கும் தொடர்பு இல்லை’ என்கிறது. தி.மு.க தரப்பில், ‘இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்பு, தேர்தல் அதிகாரியின் ஒப்புதலைச் சத்தம் இல்லாமல் வாங்கிக்கொண்டே நோட்டீஸ் கொடுத்திருப்பார்கள்’ என்கிறார்கள். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ‘இதுகுறித்து விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது’ என்று மட்டும் பதில் சொல்லியிருக்கிறார்.’’

‘‘அவர்மீது இன்னொரு புகார் கிளம்பியதைக் கவனித்தீரா?’’

‘‘நீர்தான் அவரை ஆளும்கட்சி சி.இ.ஓ என்று கட்டுரையே போட்டீரே... அதற்கேற்ப இப்போது தேர்தல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லாவின் கடிதமே வெளியாகியிருக்கிறது. ‘ஆளும்கட்சிக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி, மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா உட்பட நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும்’ என்று சுக்லா எழுதிய கடிதத்தை, சாகு புறந்தள்ளிவிட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. ‘சத்யபிரத சாகுவும் சத்தியமூர்த்தியும் ஆளும்கட்சியின் ஆட்கள் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா...’ என்று எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கிறார்கள்!’’

‘‘நான்கு தொகுதிகள் இடைத்தேர்தலிலும் பணம் விளையாடும்?’’

‘‘அந்தத் தொகுதிகளில் யார் செலவு செய்வது என்று அமைச்சர்களுக்குள் முட்டல் மோதல் எழுந்துள்ளதாம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் செலவை ஏற்கச்சொல்லி அ.தி.மு.க கட்சித் தலைமை பணித்தபோது, ‘ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலில் கைக்காசு எல்லாம் செலவு செய்துவிட்டோம். இனி செலவு செய்ய பணமே இல்லை’ என்று மதுரை மாவட்ட அமைச்சர் ஒருவர் கடுமையாகப் பொருமினாராம். இதேநிலை தான் மற்ற மூன்று தொகுதிகளிலும் நிலவுகிறது என்கிறார்கள்’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி