Published:Updated:

கர்நாடகா: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

கர்நாடகா: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
கர்நாடகா: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
கர்நாடகா: புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்ட 28 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

கர்நாடக முதல்வராக காங்கிரசை சேர்ந்த சித்தராமய்யா கடந்த 13ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் அவரது அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டது. 20 கேபினட் அமைச்சர்களுக்கும், 8 துணை அமைச்சர்களுக்கும் ஆளுனர் பரத்வாஜ் கடந்த சனிக்கிழமை பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.

நிதித்துறை, எரிசக்தி, தொழில், ஐடி, நகர வளர்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உளவுத்துறை, சுரங்கம் என பல முக்கிய துறைகளை முதல்வர் சித்தராமய்யா தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

உள்துறை - கே.ஜி.ஜார்ஜ், வருவாய் - ஸ்ரீனிவாச பிரசாத், பொதுத்துறை - மகாதேவப்பா, போக்குவரத்து - ராமலிங்க ரெட்டி, சட்டம் - ஜெயசந்திரா, ஊரக வளர்ச்சி - எச்.கே.பட்டீல், உயர்கல்வி - தேஷ்பாண்டேவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

##~~##
மேலும், வனத்துறை - ராமநாத் ராய், உள்ளாட்சி துறை - காமல் உல் இஸ்லாம், வேளாண் மார்க்கெட்டிங் - சிவசங்கரப்பா, வீட்டு வசதித் துறை - அம்பரிஷ், சிறு தொழில் - பி.பி.ஹுக்கெரி, நீர்ப்பாசனம் - எம்.பி.பாட்டீல், சுகாதாரம் - உ.டி.காதர், கலால் வரி - சதீஷ் லட்சுமண் ராவ், ஜவுளித் துறை - பாபுரா என அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.