Published:Updated:

இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 

இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 
இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கப் பயிற்சி முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளுக்கான செலவு வெறும் 2 கோடி ரூபாய்தான் என்று தெரியவந்துள்ளது. 

இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 

கடந்த 14-ம் தேதியன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் மீது நடந்த தாக்குதலை அடுத்து, தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்துக்கும் அந்த இயக்கத்தைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானுக்கும் பாடம் கற்பிக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. இதற்காக வகுக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தின.

12 விமானங்கள், சுமார் 1,000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அந்த இயக்கத்தைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள், மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டனர்

அதே சமயம் இந்தத் தாக்குதலின்போது, பாகிஸ்தானின் எஃப்16 வகை விமானங்கள் இந்தியத் தரப்பைத் தாக்க வந்தன. ஆனால், மிராஜ் 2000 வகை போர் விமானங்களின் அணிவகுப்பு அளவு, அவற்றுக்குப் பாதுகாப்புக்கு வந்த சுகாய் போர் விமானத்தைப் பார்த்த பாகிஸ்தான் விமானங்கள் பயந்து திரும்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், தீவிரவாத முகாம்களை அழிக்க இந்திய விமானப்படை பயன்படுத்திய 1,000 கிலோ வெடிகுண்டுகளுக்கான செலவு சுமார் 1.68 கோடி ரூபாய் முதல் 2.2 கோடி ரூபாய் வரைதான் ஆகியிருக்கும் எனப் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட 3 இடங்களிலும் 4 முதல் 5 வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இவை ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 56 லட்சத்திலிருந்து 73.5 லட்சம் வரை இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 

தாக்குதல் நடத்திய 12 மிராஜ் ரக போர் விமானங்களின் மொத்த மதிப்பு சுமார் 2,868 கோடி ரூபாய். இவற்றின் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 214 கோடி ரூபாய். குவாலியர் விமானத் தளத்திலிருந்து இவை புறப்பட்டுச் சென்றன. 

இந்த விமானங்களுக்குப் பாதுகாப்பாகவும், எதிரி விமானங்களைக் கண்காணிக்கவும் துணையாகச் சென்ற விமானங்களில், பஞ்சாப் மாநிலம், பதிந்தா விமானத் தளத்திலிருந்து சென்ற AWACS (Airborne Warning And Control System)எனப்படும் கண்காணிப்பு விமானங்களின் மதிப்பு 1,750 கோடி ரூபாய். எரிபொருள் தேவைப்பட்டால் நடுவானிலேயே நிரப்பிக்கொள்வதற்கான வசதி கொண்ட எரிபொருள் நிரப்பும் விமானங்களின் மதிப்பு 22 கோடி ரூபாய். இந்த விமானங்கள் ஆக்ராவிலிருந்து புறப்பட்டுச் சென்றன. 

விமானப்படையின் ரகசிய விமானத் தளத்திலிருந்து சென்ற இந்திய விமானப் படையின் உளவு விமானங்களின் மதிப்பு 80 கோடி ரூபாய். இவையெல்லாவற்றையும்விட பாகிஸ்தான் விமானப்படைக்குப் பீதி ஏற்படுத்திய 3 சுகாய் விமானங்களின் மதிப்பு 1,074 கோடி ரூபாய் ஆகும். இவை ஒவ்வொன்றின் மதிப்பும் தலா 358 கோடி ரூபாய் ஆகும்.  

மேலும் தாக்குதலுக்கு உதவியாகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து மிக் 29 ரக விமானங்களின் மதிப்பு 770 கோடி ரூபாயாகும். இவை ஒவ்வொன்றின் மதிப்பும் தலா ரூ. 154 கோடி ரூபாயாகும். மொத்தத்தில் தாக்குதலுக்குச் சென்ற அனைத்து விமானங்களின் மதிப்பு சுமார் 6,264 கோடி ரூபாய் ஆகும். 

இந்திய விமானப்படைத் தாக்குதல் - வெடிகுண்டுகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 கோடி ரூபாய்தான்! 

இவையெல்லாவற்றையும்விட விலை மதிப்பிட முடியாதது வெற்றிகரமாகத்  தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பிய நமது விமானப்படை வீரர்களின் தீரமிக்கச் செயல்!