Published:Updated:

`சென்னையில் யாருக்கு எந்தத் தொகுதி?' - இழுபறியில் அ.தி.மு.க - பா.ஜ.க

`சென்னையில் யாருக்கு எந்தத் தொகுதி?' - இழுபறியில் அ.தி.மு.க - பா.ஜ.க
`சென்னையில் யாருக்கு எந்தத் தொகுதி?' - இழுபறியில் அ.தி.மு.க - பா.ஜ.க

த்திய சென்னை மற்றும் தென் சென்னைத் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில், அ.தி.மு.க -பா.ஜ.க  கூட்டணிக்குள் இழுபறி இன்னும் நீடித்துவருகிறது.

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முடிவான பிறகு, இந்தக் கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த ஐந்து தொகுதிகளிலுமே ஸ்டார் வேட்பாளர்களைக் களமிறக்குகிறது பா.ஜ.க தலைமை. அ.தி.மு.க வாக்குவங்கியும் இருப்பதால், நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்று கணக்குப்போட்டிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். கிராமங்களைவிட நகர்ப்புறங்களில் நிறைய திட்டங்கள் மக்களுக்கு எளிதாகச் சென்றடைந்திருக்கிறது என்றும், மத்திய அரசின் நலத்திட்டங்களால் அதிகமான மக்கள் தொடர்ந்து பயனடைந்துவருவதாகவும் பா.ஜ.க-வுக்கு ஒரு தகவல் சென்றிருக்கிறது. இதனால், மத்திய சென்னை மற்றும் தென் சென்னைத் தொகுதிகளைக் கைப்பற்றுவதில் மும்மரமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு தொகுதிகளையுமே ''முக்கிய ஸ்டார் வேட்பாளர்கள்'' குறிவைத்திருக்கிறார்கள்


ஆனால், இந்த இரண்டு தொகுதிகளையும் அ.தி.மு.க தலைமை பா.ஜ.க-வுக்கு கொடுக்க மறுக்கிறது. தென் சென்னையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் ஜெயவர்தன். இவர், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஆவார்.  ஜெயவர்தன் இந்தத் தொகுதியை யாருக்காகவும் விட்டுத்தர விரும்பவில்லை. அதேபோல், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமாரும், இந்தத் தொகுதியை விடாப்பிடியாகக் கேட்டுவருகிறார். 'கடந்த தேர்தலில் தி.மு.க-வின் தயாநிதி மாறனைத் தோற்கடித்தவன். இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக நிறையத் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். அதனால், இந்தத் தொகுதியைத் தன்னால் விட்டுத்தர முடியாது' என்று தலைமையிடம் முறையிட்டிருக்கிறார்.

தேர்தலின்போது, இவர்கள் இருவரும் தாராளமாகச் செலவு செய்யக்கூடியவர்கள் என்பதை கருத்தில்கொண்ட அ.தி.மு.க தலைமையும், இந்த இரண்டு தொகுதியையும் தங்களுக்கே வேண்டும் என்று பா.ஜ.க தலைமையிடம் சொல்லியிருக்கிறார்கள்.