பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

 பொம்மையா முருகன்
 பாதுகாப்பானவர்களின் கைகளில் இந்த நாடு பாதுகாப்பாக இருக்கிறதுன்னு தன் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிச்ச மோடி... இப்ப எனது உயிருக்குப் பாதுகாப்பில்ல... கொல்ல முயற்சிப் பண்றாங்கன்னு பொலம்ப ஆரம்பிச்சிருக்காரு...

#சௌகிதார்னா கடைசிவரைக்கும் வெறைப்பா ஃபாலோ பண்ணணும்... இப்படி நடுவால கண்ணீர்லாம் சிந்தக்கூடாது!

 Akku_Twitz
“பா.ம.க-வின் கொள்கைகளுக்கு வித்திட்டவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவர்!” - அன்புமணி ராமதாஸ் #

நான்பாட்டுக்கு செவனேனுதான போய்கிட்டிருந்தேன் - கார்ல் மார்க்ஸ்

amuduarattai
சுனாமியே வந்தாலும் அ.தி.மு.க-வை அசைக்க முடியாது. -ஓ.பி.எஸ்.
உள்ளாட்சி தேர்தல் வந்தாலுமா!?

 Aruns212
நியூஸ் சேனல்களைப் பொறுத்தவரை, ‘ஸ்பெஷல் ரிப்போர்ட்’ என்பது, ‘பிரேக்கிங் நியூஸ்’ எதுவும் இல்லாதபோது சேனலில் போடப் பயன்படுவது.

 Bharu_twtz
உள்ளாட்சி தேர்தல்ன்னு ஒன்னு நடக்குமா... நடக்காதா?
நம்பலாமா... நம்பக்கூடாதா?

 mohanramko

அப்ரைசலுக்கு ஒரு மாதம் முன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென, ஓட்டு கேட்டுவரும் அரசியல் கட்சிகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

 Annaiinpillai
தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, மின்தடைதான் உள்ளது. - எடப்பாடி
#சாமி விஞ்ஞானத்தையே விண்வெளிக்கு அனுப்பிச்சிட்டீங்களே?!

ஆஹான்

JamesHarshan
நாட்டில் பாதுகாப்பின்மையை உணர்வதாக அமீர்கான் கூறியபோது, ‘அமீர்கானே பாகிஸ்தானுக்கு ஓடு’ என்று பொங்கினார்கள் தேசபக்தர்கள். இன்றைக்குத் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறதெனக் கூறி நாட்டில் பாதுகாப்பின்மை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் மோடி!

 emmeskhaleel
முதல் முறையாக எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு,  எனக்கு வங்கியில் கணக்கே இல்லை - மோடி.
நீங்க பிரதமர் ஆன பிறகு, யாரோட கணக்கிலும் பணமே இல்லை!

 yugarajesh2
ஆறு, குளம், குட்டை, ஏரிகளை, தூர்வாரிய பிறகாவது மழை வேண்டி யாகம் வளர்க்கச் சொல்லி இருக்கலாம்.
#ப்ச்ச்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு