‘‘39 பெரிதா, 22 பெரிதா?’’ என்று எல்.கே.ஜி குழந்தையிடம் கேட்டால்கூட, பளிச்சென்று பதில் சொல்லிவிடும். ஆனால், எடப்பாடி பழனிசாமியிடமும், மு.க.ஸ்டாலினிடமும் இதே கேள்வியைக் கேட்டால் ‘‘22தான்!’’ என்று சொல்வார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ள 39 தொகுதிகளைவிட இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இவர்களிருவருக்குமான ஒற்றை அஜெண்டா.

ஒருவருக்கு, ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இன்னொரு வருக்கு, எப்பாடுபட்டாவது இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும். வரும் ஜூன் 3 கருணாநிதியின் பிறந்தநாள் அன்று பதவியேற்பு விழாவையே நடத்திவிடலாம் என்று முதல்வர் கனவில் மிதக் கிறார் மு.க.ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வரும்முன்பு, சட்டமன்ற பலத்தையே குறைப்பதற்கான வேலையைத் தொடங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சியைத் தக்கவைக்க அ.தி.மு.க, குறைந்தபட்சம் 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயிக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்க தி.மு.க அதிகபட்சமாக 21 தொகுதிகளைக் கைப்பற்றியே தீர வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பையும், வாக்குப்பதிவையொட்டிய பணப்பட்டுவாடாவையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், எடப்பாடி, ஸ்டாலின் இருவரின் கணிப்புகளும் தோற்றுப்போய்விடும் போலிருக்கிறது. அ.தி.மு.க 10 தொகுதிகளில் ஜெயிப்பதும், அதேநேரத்தில் தி.மு.க 21 தொகுதிகளைக் கைப்பற்றுவதும் ரொம்பவே கஷ்டம் என்றே சொல்கிறது கடைசி நேர களநிலவரம். ஆகமொத்தத்தில், அ.தி.மு.க ஆட்சியே கவிழ்ந்தாலும் தி.மு.க ஆட்சி அமைப்பது சந்தேகமே.

ஆனால் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளாக எடப்பாடி விளையாடிவரும் எண் விளையாட்டை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்வதற்கு அவரிடம் ஆயிரம் ஐடியாக்கள் இருக்கின்றன. மீண்டும் மேலே பா.ஜ.க அரசு வந்துவிட்டால் இந்த ஐடியாக்களை அமல்படுத்துவது அவருக்கு ரொம்பவே எளிது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு மைனாரிட்டி அரசு, இரண்டு ஆண்டுகளாக ஜித்து வேலை காண்பித்து ஆட்சியைத் தொடர்ந்ததில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கவில்லை. அந்தத் தேர்தலில் 134 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. தி.மு.க கூட்டணி 98 தொகுதிகளில் வென்றது. திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சீனிவேலு மரணமடைந்தபின்பு, மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. மூன்றையும் அ.தி.மு.க வென்றது. 2016 நவம்பர் 22 அன்று அ.தி.மு.க–வின் பலம் 136 ஆக உயர்ந்தது. அதுவரை அ.தி.மு.க–வுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்ததும் அ.தி.மு.க-வில் யுத்தம் வெடித்தது. அன்றிரவே முதல்வராகப் பதவியேற்ற பன்னீர்செல்வம், சில நாள்கள் போயஸ் கார்டனுக்கும், கோட்டைக்கும் கோப்புகளோடு அலைந்தார். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித்தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராகப் பதவியேற்க முறைப்படி ஆளுநரிடம் அ.தி.மு.க கோரிக்கை வைத்தது. அதற்கு முன்பே பிப்ரவரி 7 அன்று ஜெயலலிதா சமாதியில் தனது தர்மயுத்தத்தை ஆரம்பித்தார் ஓ.பி.எஸ். அவருக்குப் பின்னால் அ.தி.மு.க–வே அணிவகுக்குமென்று பா.ஜ.க கணக்கு போட்டு, பன்னீரை ஆதரித்தது.

இன்னொருபுறம் முதல்வர் கனவில் மூழ்கியிருந்த சசிகலா, அதற்கான ஆயத்தங்களிலும் அலங்கார மாற்றங்களிலும் இருந்தபோது, புயல் போல வந்தது, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு. நான்கு வருட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம், சசிகலாவை பரப்பன அக்ரஹாரத்துக்கு அனுப்பியது. தான் அமர நினைத்த முதல்வர் நாற்காலியில் தனக்கு விசுவாசமாக இருப்பார் என்று நம்பி ஒருவரைக் கைகாட்டிவிட்டுச் சிறைக்குப் போனார் சசிகலா. அவர்தான் எடப்பாடி பழனிசாமி.

‘பழனிசாமியா, பன்னீரா... ஜெயிக்கப்போவது யாரு’ என்று எகிறியது எதிர்பார்ப்பு. பன்னீருக்குப் பக்கபலமாக பா.ஜ.க நின்றது. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடப்பாடி அரசுக்கு ஆளுநர் கெடு கொடுத்தார். 2017 பிப்ரவரி 18-ம்தேதி சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனக்குப் பின்னால் 50 எம்.எல்.ஏ–க்கள் வருவார்கள் என்று நம்பிய பன்னீருக்குப் பின்னால் வந்தது வெறும் 10 பேர் மட்டுமே. அவர்களோடு சேர்த்து பத்தோடு பதினொன்றாக நின்றார் பன்னீர். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். முதல் கண்டத்தில் தப்பியது எடப்பாடி அரசு.

“இப்போது தப்பிய அரசு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடிக்கும்” எனப் பன்னீர் சபதமிட்டார். கட்சியின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததால் அவர் உட்பட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பிலும், தினகரன் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது விசாரணைக்கு வரும் முன்பே, அரசியலில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது. எடப்பாடி ஆட்சியில் தினகரன் ஆதிக்கம் செலுத்துவதாக அவருக்கெதிராக ஓர் அணி திரண்டது. எகிற ஆரம்பித்தார் எடப்பாடி.

சசிகலாவிற்கு எதிராகப் பன்னீர் அணி, சசிகலா ஆதரவு அ.தி.மு.க–வில் எடப்பாடி அணி, தினகரன் அணி என முக்கோண மோதல் உருவானது. இதற்குத்தானே ஆசைப்பட்டோம் என்று அ.தி.மு.க–வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது பா.ஜ.க தலைமை. பன்னீர் அணி, பழனிசாமி அணிகளை இணைப்பதற்கு இரு தரப்பிலும் நெருக்கடி கொடுத்தது. 2017 ஆகஸ்டு 21 அன்று சுபயோக சுபதினத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் கைகோத்து வைத்து, டில்லி தனக்குக் கொடுத்த அசைன்மென்டை தரமான சம்பவமாக முடித்துக்கொடுத்தார், அன்றைக்கு தமிழகத்தின் பகுதி நேர ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ். அன்று மாலையே துணை முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர். அ.தி.மு.க–வின் பலம் மீண்டும் 133 ஆக உயர்ந்தது.

மறுநாளே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ–க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். பரமபதத்தில் காய் கீழே வந்தது. அ.தி.மு.க அரசின் அன்றைய பலம் 114 மட்டுமே. உண்மையில் 2017 ஆகஸ்ட் 22 அன்றே பெரும்பான்மையை இழந்துவிட்டது பழனிசாமி தலைமையிலான அரசு. அப்போதுதான் தகுதி நீக்கம் என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்தார் எடப்பாடி. ஆளுநரிடம் கடிதம் கொடுத்தவர்களைத் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அ.தி.மு.க கொறடா கடிதம் கொடுக்க, அலறிக்கொண்டு விளக்கம் கொடுத்துப் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார் ஜக்கையன்.

பெரும்பான்மை இல்லையென்பதால், எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ–க்கள் 98 பேரும் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். பன்னீர் தலைமையிலான 11 எம்.எல்.ஏ–க்கள் கொடுத்த கடிதத்தை ஏற்று, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பழனிசாமி அரசுக்குக் கெடு விதித்த ஆளுநர், தி.மு.க கூட்டணி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் என மொத்தம் 117 எம்.எல்.ஏ–க்களுடைய கோரிக்கையை நிராகரித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேயில்லை.

இந்த இடைவெளியில் 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து தனது வானளாவிய அதிகாரத்தைக் காண்பித்தார் சபாநாயகர் தனபால். இதனால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 216-ஆகக் குறைந்தது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 108 எம்.எல்.ஏ–க்கள் ஆதரவே போதும். எடப்பாடியிடம் 113 எம்.எல்.ஏ–க்கள் இருந்தனர். மீண்டும் ஓடியது அ.தி.மு.க அரசு வண்டி.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ–க்கள் 18 பேரும் நீதிமன்றம் சென்றார்கள். இரண்டு நீதிபதிகள் தீர்ப்பில் ஒருவர் செல்லும் என்றும், ஒருவர் செல்லாது என்றும் சொல்லிவிட, மூன்றாவது நீதிபதியை நியமித்தார்கள். மேலும் கடந்தது காலம். இறுதியில் ‘செல்லாது செல்லாது’ என்று அவரும் தீர்ப்பு சொல்ல, நீண்ட பெருமூச்சை விட்டார் எடப்பாடி.

இதற்கிடையில் எடப்பாடி அரசை ஆதரித்த 113 எம்.எல்.ஏ–க்களில் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் மரணமடைந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட, அவரும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவால் தி.மு.க கூட்டணியின் பலமும் 97-ஆகக் குறைந்தது. தேர்தல் அறிவித்தபின், சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மரணமடைந்தார். ஆகமொத்தம் காலியிடங்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்தது. இப்போது இரு கட்டங்களாக 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டத் தேர்தல் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார்கள் எடப்பாடியும் ஸ்டாலினும்.

சட்டமன்றத்தில் இப்போது அ.தி.மு.க-வின் பலம், சபாநாயகரைத் தவிர்த்து 113 என்ற நிலையில் இருக்கிறது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மூவர், இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தனிக்கட்சித் தலைவர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் இதில் அடக்கம். இவர்களில் தனியரசுவைத் தவிர்த்து ஐந்து பேரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதன்படி பார்த்தால் 108 எம்.எல்.ஏ–க்கள் ஆதரவுடனே அ.தி.மு.க அரசு தொடர்கிறது.

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ–க்கள் ஆதரவு அவசியம். அதற்கு, குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்றே தீரவேண்டும். இத்தனை தொகுதிகளை ஜெயிப்போமா இல்லையா என்ற அச்சம் வந்துவிட்டதால் மீண்டும் தகுதி நீக்கம் என்ற ஆயுதத்தைத் தூக்கியுள்ளார் எடப்பாடி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ–க்கள் மூன்று பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால், சட்டமன்ற பலம் 231 ஆகிவிடும். அப்போது 116 எம்.எல்.ஏ–க்கள் ஆதரவு இருந்தால் போதும். இதற்குக் குறைந்தபட்சம் ஏழு தொகுதிகளில் ஜெயித்தால் போதுமானது.

தேர்தல் முடிவுகளுக்குப்பின், ஜூனில் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், எண் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளார் எடப்பாடி. இடைத்தேர்தலில் ஏழு தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க வெற்றிபெற்றால், மூவரின் தகுதி நீக்கத்தோடு முடிந்துவிடும். ஏழுக்கும் குறைந்துவிட்டால் கருணாஸ், தமிமுன் அன்சாரியையும் தகுதி நீக்கம் செய்யும் முயற்சி எடுக்கப்படும். ஒன்றிரண்டில் மட்டுமே ஜெயித்தாலும், தி.மு.க எம்.எல்.ஏ–க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்களது பதவியும் காலி செய்யப்படும். நீதிமன்றம் போய் ஜெயிப்பதற்குள் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிடும். இதை அறிந்தே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு சட்டசபைச் செயலாளரிடம் தி.மு.க கடிதம் கொடுத்துள்ளது.

எடப்பாடியின் எண் விளையாட்டு முடியுமா, தொடருமா... மே 23 அன்று தெரியும்!

-சே.சேவியர் செல்வகுமார், அ.சையது அபுதாஹிர்

படங்கள்: எம்.விஜயகுமார், க.தனசேகரன், அ.குரூஸ்தனம், ஜெரோம்