Published:Updated:

ஜெ. வழக்கில் சூப்பர் டூப்பர் நிறுவன பங்குதாரரிடம் விசாரணை

ஜெ. வழக்கில் சூப்பர் டூப்பர் நிறுவன பங்குதாரரிடம் விசாரணை
ஜெ. வழக்கில் சூப்பர் டூப்பர் நிறுவன பங்குதாரரிடம் விசாரணை
ஜெ. வழக்கில் சூப்பர் டூப்பர் நிறுவன பங்குதாரரிடம் விசாரணை

பெங்களூரு: தமிழ முதல்வர் ஜெயல்லிதா மீதா சொத்து குவிப்பு வழக்கில் 'சூப்பர் டூப்பர் நிறுவன பங்குதாரரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்று காலை 11 மணிக்கு கோர்ட் கூடியதும், திருச்சியை சேர்ந்த மலர் மன்னன், ஆறுமுகம், ஜோதி முருகன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார் அரசு வக்கீல் பவானிசிங்.

ஜெயலலிதா, சசிகலா மற்றும் சுதாகரன் பங்குதாரர்களாக இருந்த ‘சூப்பர் டூப்பர்’ நிறுவன பங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணையில் ஏற்கெனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்த திருச்சியை சேர்ந்த மல‌ர்மன்னன் முதலில் விசாரிக்கப்பட்டார்.

‘சூப்பர் டூப்பர்’ நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதாக செய்தி தாளில் விளம்பரம் வந்தது. அதனால் ‘சூப்பர் டூப்பர்’ நிர்வாகத்தை அணுகி 10 பங்குகளை முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்கினேன். ‘சூப்பர் டூப்பர்’ நிறுவன பங்குதாரர் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன், ‘அம்மாவிற்கும் ‘சூப்பர் டூப்பர்’ நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என பவ்யமாக சொல்லி முடித்தார்.

அதன் பிறகு பேசிய அரசு வக்கீல் பவானி சிங், ‘மேலும் சாட்சியளிக்க வந்திருக்கும் ஆறுமுகம், ஜோதி முருகன் ஆகியோரின் வாக்குமூலங்களும், வருமான வரித்துறை விளக்கங்களும் தமிழில் இருப்பதால், ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த பிறகு குறுக்கு விசாரணை செய்கிறேன்’ என்றார்.

##~~##
அரசு தரப்பு வக்கீல் பவானி சிங்கின் வேண்டுகோளை ஏற்று கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா, இருவரிடமும் மே 30ஆம் தேதி குறுக்கு விசாரணை நடைபெறும் என்றார். அதனை தொடர்ந்து, நாளை மீதம் இருக்கும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடரும் என்றார்.


-இரா.வினோத்