Published:Updated:

புதிய கட்சியைத் தொடங்குகிறார் பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி!

புதிய கட்சியைத் தொடங்குகிறார் பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி!
புதிய கட்சியைத் தொடங்குகிறார் பா.ம.கவிலிருந்து விலகிய ராஜேஸ்வரி!

ந்தியா முழுவதும் கூட்டணிப் பேச்சுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில். பா.ம.க, அ.தி.மு.கவுடன் கூட்டணியை அறிவித்தது அரசியலில் பெறும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பா.ம.கவின் கூட்டணி முடிவைக் கண்டித்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நேற்று அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நடிகர் ரஞ்சித் பா.ம.கவிலிருந்து விலகிய நிலையில் இன்று தினகரன் முன்னிலையில் அ.ம.மு.கவில் இணைந்தார். ராஜேஸ்வரி பா.ம.கவிலிருந்து விலகும் போதே செய்தியாளர் சந்திப்பில் புதியக் கட்சி தொடங்கும் எண்ணம் இருபதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராஜேஸ்வரி புதிய அமைப்பைத் தொடங்குவதற்கான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாகவும் அது குறித்த தகவல்களை நாளை வெளியிட உள்ளதாகவும் முதலில் அமைப்பாகத் தொடங்கி பின்னர் அதைக் கட்சியாக கட்டமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே பா.ம.கவில் இருந்த வேல் முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற புதியக் கட்சியை ஆரம்பித்து கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கைப் பெற்று விளங்குகிறார். அதேபோல் காடுவெட்டி குருவின் இறப்பிற்குப் பிறகு குருவின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் பா.ம.கவிலிருந்து விலகித் தனித்து தேர்தலைச் சந்திக்க உள்ளோம் எனக் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.