Published:Updated:

மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை

மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை
மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை
மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை

லக்னோ: மாயாவதி ஆட்சியில் நடைபெற்ற ரூ.1400 கோடி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த லோக் ஆயுக்தா பரிந்துரைத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையிலான கடந்த ஆட்சியின்போது ஏராளமான நினைவு மண்டபங்கள், அவரது கட்சி சின்னமான யானை சிலைகள், மாயாவதியின் சிலைகள் மற்றும் பூங்காங்கள் அமைக்கப்பட்டன. இதில் ஊழல் நடந்திருப்பதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பின்னர் தேர்தலில் மாயாவதி கட்சி தோல்வியடைந்து, அகிலேஷ் யாதவ் முதல்வராக பொறுப்பேற்றதும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணையை அகிலேஷ் தீவிரப்படுத்தினார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்தா நீதிபதி மெஹ்ரோத்ரா, முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், மாயாவதி ஆட்சியில் நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் கட்டியதில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையில் 30 சதவீதம், அதாவது ரூ.1400 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

##~~##

இதில் அமைச்சர்களுக்கும் பங்கு உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும். இழப்பீடு தொகையான ரூ. 1,400 கோடியையும் மாயாவதியின் முக்கிய உதவியாளரான நசிமுதீன் சித்திக்கிடம் இருந்து பெறவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது மாயாவதிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதனிடையே இவ்வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மாயாவதியின் முக்கிய உதவியாளருமான நசிமுதீன் சித்திக்கி, மாயாவதிக்கு வலது கையாக செயல்பட்ட பாபுசிங் குஷ்வாலா ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக 2 முன்னாள் அமைச்சர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் லோக் ஆயுக்தா பரிந்துரை செய்துள்ளது.

மேலும் 50 அரசு பொறியாளர்கள், 37 கணக்கர்கள் உள்ளிட்ட 900 பேரிடம் விசாரணை நடத்தவும் அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.