Published:Updated:

மழையை காரணம் காட்டி, கர்நாடகா தண்ணீர் இல்லை என்று சொல்ல முடியாது: எச்.ராஜா பேட்டி

மழையை காரணம் காட்டி, கர்நாடகா தண்ணீர் இல்லை என்று சொல்ல முடியாது: எச்.ராஜா பேட்டி
மழையை காரணம் காட்டி, கர்நாடகா தண்ணீர் இல்லை என்று சொல்ல முடியாது: எச்.ராஜா பேட்டி
மழையை காரணம் காட்டி, கர்நாடகா தண்ணீர் இல்லை என்று சொல்ல முடியாது: எச்.ராஜா பேட்டி

கோவை: பருவமழை பெய்யவில்லை என்ற காரணத்தை காட்டி காவிரியில் இருந்து கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் இருக்க முடியாது எனவும், பற்றாகுறை நிலவும் காலத்திலும் இருக்கும் தண்ணீரை இரு மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் எச்.ராஜா கூறினார்.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி மாகாளியம்மன் கோவில் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவை வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் எச்.ராஜா இன்று கோவிலை பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த அவர், ''சம்பவம் நடந்து ஓரு மாதத்துக்கு மேலாகியும் குற்றவாளிகளை காவல் துறை கைது செய்யவில்லை. கோவிலை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில் நியாயம் கேட்டு போராடிய இந்து அமைப்பினரை விடுவிக்க வேண்டும்.

காவிரி பிரச்னையில் முந்தைய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து

##~~##
விட்டதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் கூறிய கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பரமேஸ்வரன் பிரிவினைவாத தலைவர் போல பேசியிருகிறார். கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. கட்சி ஆட்சியின்போது காவிரி பிரச்சினையில் நியாய உணர்வுடன் கர்நாடக பா.ஜ.க. நடந்து கொண்டது.'' என்றார்.
மேலும், ''பருவ மழை பெய்யாத காலங்களில் இரு மாநில அரசுகளும் இருக்கும் தண்ணிரை பகிர்ந்து கொள்ள வேண்டும். மழை இல்லை என்ற காரணத்தை காட்டி தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு சொல்ல முடியாது எனவும் எச்.ராஜா தெரிவித்தார்.
ச.ஜெ.ரவி