Published:Updated:

ஃப்ளாஷ்பேக்: ``வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!’’ - உள்காயம் திருமா

ஃப்ளாஷ்பேக்: ``வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!’’ - உள்காயம் திருமா
ஃப்ளாஷ்பேக்: ``வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!’’ - உள்காயம் திருமா

ஆனந்த விகடன் 13.03.2014 தேதியிட்ட இதழில் திருமாவளவனின் பேட்டி...

``தி.மு.க-வுடனான தொகுதிப் பங்கீடு இவ்வளவு கசப்பான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?’’

``அரசியலில் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? இப்போதும் நிறைய வருத்தங்கள் இருக்கின்றன. ஆனால், `நம்பிக்கையாக இருந்தோம்... உண்மையாக இருந்தோம்... ஏமாத்திட்டீங்களே...’ என்ற கோணத்தில் வருத்தம் இல்லை!’’

ஃப்ளாஷ்பேக்: ``வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!’’ - உள்காயம் திருமா

``பேச்சுவார்த்தையில் என்னதான் நடந்தது... உங்களுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்தது யார்... மனம் திறந்து பேசலாமே?’’

``முதலில் ஐந்து தொகுதிகள் கேட்டோம். பிறகு `மூன்றாவது கொடுங்கள்’ என்றோம். `விழுப்புரம் அவசியம்’ என்றோம். `அது சிக்கல்’ என்றார்கள். `அப்படியானால் காஞ்சிபுரம் வேண்டும்’ என்றோம். அதற்கும் உடன்படவில்லை. `சிதம்பரம் தவிர்த்து கூடுதலாக ஒரு தொகுதி நிச்சயம் வேண்டும்’ என்று அழுத்திக் கேட்கவுமே திருவள்ளூரைக் கொடுத்தார்கள்.

பேச்சுவார்த்தையில் என்ன பேசினோம் என்பதை எல்லாம் நான் விளக்கமாகச் சொல்ல முடியாது. அது எங்கள் கூட்டணியைப் பாதிக்கும். அப்படியெல்லாம் திறந்த மனதோடு பேச பிற கட்சிகள் மறுக்கும் நிலையில், நான் ஓரளவுக்கேனும் இது பற்றிப் பேசுகிறேன். ஆனால், இப்போது நாங்கள் திருப்தியாக உள்ளோம்.

திருவள்ளூர் தொகுதி, தி.மு.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் வலுவாக இருக்கும் பகுதி. எனவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்!’’

- மிஸ்டர் கழுகு திரட்டிய சமீபத்திய தகவல்படி வி.சி.க தரப்பில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளைக் குறிப்பிட்டு, அதில் இரண்டைக் கேட்டுள்ளார்கள். ஆனால், தி.மு.க தரப்பில் வி.சி.க-வுக்கு ஒன்று என்கிற கணக்கில் இருக்கிறார்கள். இப்போது அப்படியே 2014 நிலையை ஃப்ளாஷ்பேக்கில் தேடும்போது, ஆனந்த விகடன் 13.03.2014 தேதியிட்ட இதழில் சிக்கியது `வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!’ எனும் திருமாவளவனின் சிறப்புப் பேட்டி.