Election bannerElection banner
Published:Updated:

`இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும்! - ட்ரம்ப் நம்பிக்கை

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் நேற்று முன்தினம் (பிப் 26) தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக 27-ம் தேதி காலை, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, அபிநந்தன் என்ற இந்திய விமானி பாகிஸ்தான் படையினரின் வசம் உள்ளார்.

இதையொட்டி நேற்றைய தினம் அபிநந்தன் ரத்தக் காயங்களுடன் இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிறகு தான் நலமாக இருப்பதாகத் தேநீர் அருந்தியபடி அபிநந்தன் பேசும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் #Saynotowar ##AbhinandanMyHero போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலானது. தற்போது போர் குறித்துப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் வியட்னாமில் நடந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய அவர், ``இரு தரப்பிலிருந்தும் நல்ல காரணமுள்ள செய்திகளை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து கேள்விப்படுகிறேன். இந்தப் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் " என்றார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு