Published:Updated:

இடதுசாரிகள் இழுபறி... ஓ.கே சொன்ன ஆம் ஆத்மி! - கமலின் கூட்டணி கணக்கு

இடதுசாரிகள் இழுபறி... ஓ.கே சொன்ன ஆம் ஆத்மி! - கமலின் கூட்டணி கணக்கு
இடதுசாரிகள் இழுபறி... ஓ.கே சொன்ன ஆம் ஆத்மி! - கமலின் கூட்டணி கணக்கு

டிகர் கமல்ஹாசன் அரசியல்வாதி கமல்ஹாசனாய் செயல்படத் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் கமல் ஈடுபட்டுவருகிறார். தமிழகத்தில் ஏற்கெனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை மையப்படுத்தி இரு அணிகள் உருவாகியுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் மூன்றாவது அணியைக் கட்டமைப்பதற்கான முயற்சியில் கமல் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியுடனும் மார்க்சிஸ்ட் கட்சியுடனும் டெல்லியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், `` நேர்மையான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் நல்ல முடிவை எட்டுவோம். இடதுசாரிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில்தான் உள்ளது. ஆனால், ஆம் ஆத்மி உடனான கூட்டணி உறுதி செய்யப்படும் நிலையை எட்டியுள்ளது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்” என்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், ``தி.மு.கவுடனான தொகுதிப் பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாள்களில் சுமுகமான முடிவு இதில் எடுக்கப்படும். கமல்ஹாசன் டெல்லியில் எங்களுடைய கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், நாங்கள் ஏற்கெனவே தி.மு.கவுடன் வலுவான கூட்டணியை கட்டமைக்கும் முயற்சியில் உள்ளோம்” என்றார்.