Published:Updated:

``இந்திய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்!’’ - பாகிஸ்தான் பெண்களின் ஒருமித்த குரல்

``இந்திய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்!’’ -  பாகிஸ்தான் பெண்களின் ஒருமித்த குரல்
``இந்திய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்!’’ - பாகிஸ்தான் பெண்களின் ஒருமித்த குரல்

`இந்தியாவுடன் சுமுக பேச்சுவார்த்தைக்குத் தயார். இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை திருப்பி அனுப்புவதன் மூலம் பதற்றம் குறையுமெனில் அதற்கும் தயார்’ எனப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், போர் வேண்டாம் அமைதி வேண்டும் என மற்றொரு தரப்பும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் சிலர் ``போர் வேண்டாம்; இந்திய பெண்களும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இணையத்தில் இயக்கம் ஒன்றை உருவாக்கி புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலில்போது பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டுப் பெண்கள் சிலர் #AntiHateChallenge எனும் பிரசாரத்தைத் தொடங்கி ட்ரெண்டாக்கினர். அதேபோன்று தற்போது ''#SayNoToWar’’ என்னும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த ஹேஷ்டாக்கின் கீழ் தங்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். ``இந்திய சகோதரிகள் அனைவரும் இந்தப் பிரசாரத்தில் பங்குபெற வேண்டும். பெண்களால் எதை வேண்டுமானால் மாற்ற முடியும்’’ என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.