Published:Updated:

`எனக்கு 71 வயது ஆகிவிட்டது; இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!'- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

`எனக்கு 71 வயது ஆகிவிட்டது; இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!'- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
`எனக்கு 71 வயது ஆகிவிட்டது; இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!'- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

``எனக்கு 71 வயது ஆகிவிட்டதால் இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``நேற்று முன்தினம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் தீவிரவாதி முகாமில் தாக்குதல் நடத்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய இராணுவம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி முகாம்களில் தாக்குதல் நடத்தியதை அரசியல் செய்யக் கூடாது என்று பா.ஜ.க தரப்பில் கூறினார்கள். ஆனால், தற்போது அவர்கள்தான், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலை அரசியலாக்கி வருகின்றனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசு அதிகாரிகளைத் தேர்வு எழுத வைப்பது உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகம்” என்று கூறியவரிடம் நடைபெற இருக்கும் நாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ``எனக்குத் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் நான் போட்டியிடுவேன். நான் ஒரு சாமியார். எனக்கு 71 வயதாகிவிட்டதால் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். 39 கோரிக்கைகளை முன் வைத்து ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா  போராட்டத்தை நடத்தினோம். அதில் சில கோரிக்கைகள் உடனே ஏற்கப்பட்டது. சில நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது. மேலும் அரசு ஊழியர்களுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று ஆளுநரிடம் பகிரங்கமாக குற்றம் சுமத்தினோம்.

ஆனால், அதற்கெல்லாம் அவரிடம் எந்த பதிலும் இல்லை. அதேபோல தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு விருது வழங்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதா என்று அவரிடம் கேட்டதற்கு, அவர் திணறியதோடு ஏதேதோ காரணங்களைச் சொல்லி எங்களை சமாதானப்படுத்த முயன்றார். நாங்கள் முன் வைத்த 39 கோரிக்கைகளும் அப்படியே இருப்பதால் போராட்டத்தை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால் போராட்டத்தை மீண்டும் தொடருவோம்” என்றார்.