Published:Updated:

இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்திய எஃப்-16 ரக விமானத்தை பாகிஸ்தான் வாங்கிய கதை!

இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்திய எஃப்-16 ரக விமானத்தை பாகிஸ்தான் வாங்கிய கதை!
இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்திய எஃப்-16 ரக விமானத்தை பாகிஸ்தான் வாங்கிய கதை!

'அம்ராம் ' என்று அழைக்கப்படும் AIM-120 சிறிய ரக ஏவுகணை, அமெரிக்காவின் ரேதியோன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. தைவான், பாகிஸ்தான், பின்லாந்து, அமீரகம், துருக்கி போன்ற நாடுகள், இந்த ரக சிறிய ஏவுகணையை வாங்கியுள்ளன. இந்த ஏவுகணையை எஃப்.16 ரக விமானத்தில் இருந்து மட்டுமே ஏவ முடியும். 

எஃப்-16, நான்காம் தலைமுறை போர் விமானம். மிக்-21 இரண்டாம் தலைமுறை போர் விமானம். தற்போது, இந்தியாவால்  தரம் உயர்த்தப்பட்டு, 'பிசான்' என்று அழைக்கப்படுகிறது. அபிநந்தன், தன் மிக் விமானத்தில்தான் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எஃப்-16 விமானி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளார். மக்களிடம் தான் யார் என்று கூற மறுத்துள்ளார். இதனால், அவரை மக்கள் தாக்கியுள்ளனர். பின்னர், பாகிஸ்தான் விமானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்திய ராணுவ அதிகாரிகள், எஃப்-16 ரக விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அம்ராம்  ரக ஏவுகணையின் பாகத்தை நேற்று செய்தியாளர்களிடத்தில் காட்டியுள்ளனர். காஷ்மீரின் ரஜோரி பகுதியில் இந்த பாகம் கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்க சட்டத்தின்படி, பிற நாடுகள் மீது எஃப்-16 கொண்டு தாக்கினால், அந்த விமானங்களை அமெரிக்கா திரும்பப் பெற முடியும். அதனால்தான், எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது. 

உள்நாட்டுத் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகவே  எஃப்-16 ரக விமானங்களை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது.. ஆனால், தற்போது எஃப்-16 விமானத்தை இந்திய ராணுவ நிலைகள்மீது தாக்கப் பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், எஃப்.16 ரக விமானத்தில் பயன்படுத்தக்கூடிய அம்ராம் ஏவுகணைகளை ரேதியோன் நிறுவனத்திடம்  கடந்த 2006-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. 2010- ம் ஆண்டு, இந்த ரக ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. பாகிஸ்தானுக்கும் ரேதியோன் நிறுவனத்துக்குமிடையேயான முதல் ஒப்பந்தம் இது. இந்த ரக ஏவுகணைகள், விமானத்தைத் தாக்கி அழிக்கக்கூடியவை.

2006-ம் ஆண்டு, பாகிஸ்தான் 36 எஃப்- 16 சி.டி ரக விமானத்துக்கு 1.4 மில்லியன் டாலர் மதிப்பில் ஆர்டர் கொடுத்தது. அதோடு, 640 மில்லியன் டாலர்கள் மதிப்பில், எஃப்-16 ரக விமானத்துக்குத் தேவையான வெடிகுண்டுகள், அம்ராம் ரக ஏவுகணைகளுக்கும் ஆர்டர் கொடுத்தது.