Published:Updated:

``மீம்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்!” -பா.ம.க வின் ஐ.டி விங்

``மீம்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்!” -பா.ம.க வின் ஐ.டி விங்
``மீம்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்!” -பா.ம.க வின் ஐ.டி விங்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களின் சமூக வலைதள அணிகளை வலுப்படுத்தி வருகின்றன. காரணம், தாங்கள் அறிவிக்கப்போகிற தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வலுவான ஊடகமாக சமூக வலைதளங்கள் இருக்கப் போகிறதென்பதை கட்சிகள் உணர்ந்துவிட்டன. ஆகவே, அதற்கான வியூகங்களும் நெறிகளும் வகுக்கப்பட்டு வருகிறது. பா.ம.க இதை எப்படிக் கையாண்டு வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் விதமாக அதன் சமூக வலைதள அணித்தலைவரான அருளிடம் பேசினோம்.

``எங்களுடைய சமூக வலைதள அணியோட பெயர் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை. நாங்க இரண்டு அணி வெச்சு இருக்கோம். ஒன்னு, கட்சியோட அதிகாரபூர்வமான அறிவிப்புகள், அறிக்கைகள் இதெல்லாம் வெளியிடுறதுக்கு உரையாடுறதுக்குன்னு ஒரு அணி. இன்னொன்னு கட்சிக்காக சமூக வலைதளங்கள்ல கருத்துகளைப் பரப்புகிற பெரிய டீம். வெளிநாட்டுல இருக்கிறவங்கள்லாம் சேர்த்து மொத்தம்  எட்டாயிரம் டு பத்தாயிரம் பேர் இருக்காங்க. 

அவங்களுடைய வேலைகள் என்ன?

இதுதான் வேலைன்னு சொல்ல முடியாது. கட்சியின் மேல அக்கறை வெச்சு அவங்களா வர்றாங்க. பொதுவா என்ன பண்ணனும்னா மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிடுற அறிக்கைகளை, அவர் பேசுற வீடியோக்களை ஷேர் பண்ணனும். அது இல்லாம அவங்களாகவே மீம்ஸ், வீடியோஸ் ரெடி பண்ணுவாங்க. அதோட எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். 

பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக்கு நெறிமுறைகள்லாம் இருக்கா?

சாதி, மதம், மொழி இதை அடிப்படையா வெச்சு யாரையும் திட்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கிறோம். குறிப்பாக சாதியை வெச்சு இழிவு செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கோம். அதேபோல கட்சி நிலைப்பாட்டுக்கு முரண்பாடா ஏதும் செய்யக்கூடாது. இதுபோல நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு. கட்டுப்பாடுகள் இருந்தாலும் கட்சிப்பணிகள்ல எந்த தொய்வும் இருக்காது. மற்ற விஷயங்களைத் தேர்தல் நெருங்கும்போது தெரிஞ்சிக்குவீங்க.