Published:Updated:

முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகையில் மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகையில் மாற்றம்!
முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகையில் மாற்றம்!
முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகையில் மாற்றம்!

திருச்சி: வருகிற 24ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, வருகிற 24ஆம் தேதி ஸ்ரீரங்கம் வருவதாக இருந்தது. இங்குள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும், அம்மா மலிவு விலை உணவகத்தை திறந்து வைக்கவும் திட்டமிட்டிருந்தார்.

##~~##
இந்நிலையில் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது அவர்களை முதல்வர் வந்து விட்டு செல்லும் வரை தற்போது இருக்கும் இடத்திலேலேயே பணியாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த காவலர்களை உடனடியாக மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு அனுப்புமாறு உயரதிகாரிகளிடம் இருந்து தகவல் வந்திருக்கிறது. இதனால் முதல்வர் வரும் தேதியில் மாற்றம் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், 27ஆம் தேதி அல்லது 2ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-ப்ரீத்தி கார்த்திக்