Published:Updated:

குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க இனி, ரூ 25 கட்டணம்

குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க இனி, ரூ 25 கட்டணம்
குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க இனி, ரூ 25 கட்டணம்

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அதன் உள்ளே இருக்கும் மொஹல் கார்டனை சுற்றிப்பார்க்க 25 கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்க இனி, ரூ 25 கட்டணம்

குடியரசு தலைவர் மாளிகையையும் மொஹல் கார்டனையும் சுற்றிப் பார்க்க தற்போது கட்டணம் ஏதும் இல்லாமலேயே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் இதற்கான முன் அனுமதியை நேரிலோ ஆன் லைன் மூலமாகவோ முன்கூட்டியே பெறவேண்டும். குடியரசு தலைவர் மாளிகையை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என்று கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. இதையடுத்து கடந்த வாரம் வரை குடியரசு தலைவர் மாளிகையை 34, 300 பேர் சுற்றிப் பார்த்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், பொதுமக்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், கார்டன் மற்றும் வழித்தடங்கள் பராமரிப்புச் செலவுகளுக்காகவும், மாளிகையை பார்க்க வரும் பொதுமக்களிடம் தலைக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்க தீர்மானித்திருக்கிக்கிறார்கள். ஆனாலும், முப்பது பேருக்கும் மேற்பட்ட குழுவாக வருகிறவர்களுக்கு கட்டணத்தில் சலுகை உண்டாம். அதேபோல், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

##~~##
பொதுமக்களுக்காகவும் சுற்றுலா பயணிகளுக்காகவும் ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மொஹல் கார்டன் திறக்கப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் பார்வையாளர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.