Published:Updated:

‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

சுழற்றியடிக்கும் சர்ச்சை

‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து... அவர், நாதுராம் கோட்சே’ என்கிற பேச்சின் மூலமாக இந்திய அரசியல் விவாத களத்தின் மய்யத்துக்கு வந்துவிட்டார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்!

அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்துப் பேசினார், கமல்ஹாசன். ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்னை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்னைகளைத் தொட்டுப் பயணித்த கமலின் பேச்சு ஒருகட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு, நாதுராம் கோட்சே என்று திசைதிரும்பியது. 

‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

“பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டிலிருந்து தைரியமாக எழுந்த குரல் யாருடையது என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும். மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். இதை நான் பேசியதற்காக என்மீது பாய்ந்தார்கள். என்னைத் தூக்கில் போடவேண்டும், சுட்டுக்கொல்ல வேண்டும் என்றார்கள். தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் தவறு’’ என்று சொன்ன கமல்ஹாசன், “இது முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடம் என்பதனால் இதைச் சொல்லவில்லை... காந்தியார் சிலைக்கு முன்பாக இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்கு பதில் தேடி வந்திருக்கிறேன்” என்று ஆவேசமானார்.

ஆக, அதுவரையிலும் அவர் பேசியிருந்த ‘அரசு மருத்துவமனை, மணல் கொள்ளை’ எல்லாம் அடிபட்டுப்போய், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்கிற ஒற்றை வரி மட்டும் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி, பிரதமர் நரேந்திர மோடிவரை கமல்ஹாச னின் இந்தக் கருத்துக்கு எதிர்வினை யாற்றினர். அரவக்குறிச்சி காவல் நிலையத்தில், கமல்ஹாசன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

கமல் பேச்சுக்கு ஒருபுறம் கண்டங்கள் எழுந்திருப்பது போலவே, “கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்” என்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆவேசப் பேச்சுக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம், “இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர் களும் மாமன் மச்சான்களாக, அண்ணன் தம்பிகளாகப் பழகிவரும் நம் சமூகத்தில், சண்டையை மூட்டிவிடப் பார்க்கிறார் கமல். ‘சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து’ என்று சொல்வது, இந்துக்களை வம்புக்கு இழுக்கிற வேலை. கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று நான் சொல்லவில்லை. அப்படிப் பேசினால், மக்களின் கோபம் இப்படியெல்லாம் வரும் என்பதைச் சொல்வதற்காக நான் அப்படிப் பேசினேன். சட்டத்துக்கு விரோதமாகவோ, சமூகத்துக்கு விரோதமாகவோ நான் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. கமல் தன்னுடைய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தால், நானும் என் பேச்சுகளை வாபஸ் வாங்குவேன்” என்றார்.

‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி!

இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரனிடம் பேசினோம். “இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல்முறை அல்ல. அதைப் பல தடவைப் பேசியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார். வழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்னைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். அரவக்குறிச்சி பேச்சின் முன்பகுதியையும், பின்பகுதியையும் வெட்டி எறிந்துவிட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். விஷயத்தை வேண்டுமென்றே திசைதிருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக் கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

தேர்தல் முடிந்தால், இந்தச் சர்ச்சைகள் எல்லாம் ஓய்வெடுத்துக்கொள்ளும்!

- ஆ.பழனியப்பன்

‘டென்ஷனில் காவல்துறையினர்!’

ரவக்குறிச்சி பேச்சைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்துக்காக மதுரைக்கு வந்த கமலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பசுமலை பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிய கமல், முன்ஜாமீன் பெறுவது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலுக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்தார். அங்கு ஓர் இடத்தில், அனுமன் சேனா என்கிற அமைப்பினர் உட்பட 11 பேர் கமலுக்கு எதிராகக் கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் கமல் இருந்த நாள்களில், போலீஸார் டென்ஷனாகவே காணப்பட்டனர்.

-  அருண் சின்னதுரை