Published:Updated:

வைகோவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல்லில் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்த பா.ஜ.க தொண்டர்கள்!

வைகோவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல்லில் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்த பா.ஜ.க தொண்டர்கள்!
வைகோவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல்லில் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்த பா.ஜ.க தொண்டர்கள்!

திண்டுக்கல்லில் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார்  குவிக்கப்பட்டனர். 

வைகோவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல்லில் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்த பா.ஜ.க தொண்டர்கள்!

திண்டுக்கல்லில் இன்று மாலை ம.தி.மு.க மாவட்டக் கழகம் சார்பாக, தேர்தல் நிதி வழங்கும் கூட்டம் நடைபெற்றது. அதற்காக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ காலையிலேயே திண்டுக்கல் வருகை தந்தார். இந்தக் கூட்டம் தனியார் தங்கும் விடுதி மண்டபத்தில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், `அங்கு கூட்டம் நடத்தக்கூடாது. மீறி அனுமதி அளித்தால் மண்டபத்தை அடித்து நொறுக்கி விடுவோம்’ என பா.ஜ.க தொண்டர்கள் மிரட்டல்  விடுத்தனர். அதையடுத்து விடுதியின் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காலை முதலே பரபரப்பு நிலவியதால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர்.

வைகோவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல்லில் ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி எறிந்த பா.ஜ.க தொண்டர்கள்!

மாலை நடக்கும் கூட்டத்துக்கு வருகை தரும் வைகோவுக்குக் கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க தொண்டர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வாணிவிலாஸ் அருகே  கூடினர். பின்பு, வைகோவைக் கண்டித்து கண்டனக் கோஷங்கள் எழுப்பியபடி விடுதியை நோக்கிப் புறப்பட்டனர். இவர்களைத் தடுக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். வைகோ வருகை தரும் சாலையின் இருபுறமும் வைத்திருந்த ம.தி.மு.க கொடிகளைப் பிடுங்கி ரோட்டில் வீசி அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால் திண்டுக்கல்-  கரூர் சாலையில்  பெரும் பரபரப்பு நிலவியது.