சமூகம்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

லக நாயகன்தான் இன்று உள்ளூர் டீக்கடை தொடங்கி மோடியின் மன் கி பாத்வரை பேசுபொருள். போகிறபோக்கில, அவர் பற்ற வைத்தது குபுகுபுவென காட்டுத்தீயாய் எரிகிறது. தமிழிசை உள்பட பலரும் கமலின் ஜாதகத்தை ஆராயும்போது நாமும் நம் பங்குக்கு ஜாலியாக அலசினோம். அதில் கிடைத்த லேட்டஸ்ட் டேட்டா இவை! கட்சி தொடங்கியபின் கமலுக்குப் பிடித்தவை லிஸ்ட்டில் நிறையவே மாற்றங்கள். 

ஐடியா அய்யனாரு!

கமலின் காலர் ட்யூன்:
கட்சிக்குப் பிள்ளையார் சுழி போட்ட நன்னாளில் - ‘ஏ...தே...தோ எண்ணம் வளர்த்தேன்’.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து மார்ச் வரை - ‘கண்மணி அன்போடு’.

கூட்டணிகள் எல்லாம் முடிவான மார்ச் பாதியிலிருந்து - ‘நானாகிய நதிமூலமே’.

ரிசல்ட்களுக்குப் பின் இந்தப் பாடலை வைக்க வாய்ப்பிருக்கிறது - ‘அன்பே சிவம்’.

கமலுக்குப் பிடித்த படம்:
மக்கள் நீதி மய்யம் எனப் பெயர் வைத்தபோது - ஆளவந்தான்.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்களின்போது - நானும் ஒரு தொழிலாளி.

கடந்த இரண்டு வாரங்களாக ரொம்பவும் பிடித்தது - ஹேராம்.

அடுத்தத் தேர்தல் வரையில் - நினைத்தாலே இனிக்கும்.

கமலுக்குப் பிடித்த நடிகர்:

கடந்த ஆண்டு வரை கமலுக்கு உலக நாயகன் கமலை மட்டுமே பிடிக்கும்.

இந்த ஆண்டு - ஒருசில நாடகங்களில் நடித்த நடிகரான ஸ்டாலினை கொஞ்சகாலம் பிடித்தது.

தற்போது - வழக்கம்போல் போட்டிக்கு வராமல் வெவ்வெவ்வே காட்டிய சூப்பர்ஸ்டாரை!

தேர்தல் முடிவுகளுக்குப் பின் - வேறு காரணங்கள் இல்லாததால், தசாவதானியான கமலை கமலுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

கமலுக்குப் பிடித்த இடம்:
கொஞ்ச காலம் முன்புவரை: ஆண்டவர் என ரைமிங் பெயர்வரக் காரணமாக இருந்த ஆழ்வார்பேட்டையை!

தற்போது: டெல்லிக்கு தன் சகாக்களோடு ஃப்ளைட் ஏறத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்: செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி. அங்கேதான் பிரமாண்ட பிக்பாஸ் செட் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது.