இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது, மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்று தெரிந்திருக்கும். எந்த அரசாக இருந்தாலும், புதிய அரசு கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் எவை என்பது குறித்து அலசும் மினி தொடர் இது. இந்த வாரம் சுற்றுச்சூழல் துறையில் புதிய அரசு செய்ய வேண்டியவை என்ன என்பதை விளக்குகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்.

மத்தியில் அமையப்போகும் புதிய அரசுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங் களில் கடும் சவால்கள் நிறைந்துள்ளன. என்ன செய்யவேண்டும் புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு?

காலநிலை மாற்றம் என்பது இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு விஷயம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தென் கொரியாவில் உள்ள இஞ்சேன் நகரத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கை, காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறித்து எச்சரித்துள்ளது. பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் ‘காலநிலை அவசர நிலையை’ (Climate Emergency Declaration) அறிவித்துள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு அரசுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்துக் கவலைகொண்டு அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்கென காலநிலை சட்டமே இன்னும் இயற்றப்படவில்லை.

முதலில் காலநிலை சட்டம் உருவாக்கப்பட வேண்டும். புதிய அரசு செயல்படுத்தப்போகும் அனைத்துத் திட்டங்களிலும் காலநிலை மாற்றம் குறித்த பார்வை இருக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துவது அவசியம்.

பிரிட்டன், கனடா நாடுகளைப் போல் இந்திய அரசும் ‘காலநிலை அவசரநிலையை’ அறிவித்து, சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை முழுவதும் கைவிட வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவிற்கெனக் காலநிலை மாதிரிகளை உருவாக்க வேண்டும். பல்வேறு பருவநிலைகளைக் கணிக்கக்கூடிய, இந்தியாவின் பருவங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, பிரத்யேகமாக உள்ள ‘இந்தியப்பெருங்கடல் இருமுனை’ (indian ocean di-pole) உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக அவை இருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ‘கடற்கரை ஒழுங்குமுறை மண்டலங்கள்’ வடிவமைக்கப்பட்டு, கடல்மட்டம் உயர்வதை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

கடற்கரை கடல் பழங்குடிகளின் பூர்வீகம்; தாய்நிலம். அதை உணராமல் கடற்கரையில் சொகுசு விடுதிகள் அமைப்பது, அணுமின்நிலையங்கள், புதிய துறைமுகங்கள் எனக் கடற்கரையை அழிவுத்திட்டங்களின் புகலிடமாக மாற்றுவது முழுவதும் கைவிடப்பட வேண்டும்.

ஆற்றல் கொள்கை

முதல்முறையாக பிரிட்டன், கடந்த வாரத்தில், அனல்மின் நிலையங்கள் இல்லாமல் தன் மின்தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. பிரான்ஸ் நாடும் தன்னுடைய மின்தேவையை அனல் மற்றும் அணுமின் நிலையங்களைத் தவிர்த்து உற்பத்தி செய்ய முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டது. இந்தியாவும் சுற்றுச்சூழலைக் கெடுக்காத, ‘புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களை’ நோக்கி உத்வேகத்துடன் முன்னேற வேண்டும். இதற்கெனத் தனித்துவமான கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு, புதிய அரசுக்கு இருக்கிறது.

காலநிலை மாற்றத்தை அதிகரிப்பதில் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் கார்பன் முக்கியப் பங்காற்றுகிறது. குவிக்கப்பட்ட மின் உற்பத்தி முறையைக் கொள்கைரீதியாகக் கைவிட்டு, பரந்துபட்ட மின்னுற்பத்தி முறைக்கு மாற அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வது காலத்தின் கட்டாயம். எதிர்கால சந்ததிக்கான தேவையும் அதுவே.

காற்று மாசு

உலகத்தை அச்சுறுத்தும் இன்னோர் அபாயம் காற்று மாசு. உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் பல கோடி மக்கள் காற்று மாசால் அடையும் துன்பங்கள் ஏராளம். கடந்த ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க அரசு அறிவித்த ‘தூய்மையான காற்றுக் கான தேசிய நடவடிக்கையில்’ பல போதாமைகள் உள்ளன.

புதிய அரசு காற்று மாசை அளக்கக்கூடிய கருவிகளை இந்தியா முழுவதும் நிர்மாணித்து அதை இணையம் நிகழ்நேர(real-time) கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும். காற்று மாசை ஏற்படுத்தக்கூடிய அனல்மின்நிலையங்கள், போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தையும் முறைப்படுத்துவது முக்கியமான கடமை.

வாகனங்களின் பெருக்கம், காற்று மாசுக்கு முக்கிய காரணம். எனவே அரசே பொதுப் போக்குவரத்தை அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும். பெருநகரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எளிதாகச் செல்லக்கூடிய போக்குவரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பொதுப்போக்கு வரத்தில் முதலீடு செய்வது, சுகாதாரத்துறையில் தேவைப்படும் முதலீட்டைப் பலமடங்கு குறைக்கும்.

நீர்வளம்

உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கு. 130 கோடி மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்க, புதிதாகப் பதவியேற்கும் அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், விவசாயத்திற்குத் தேவையான நீரையும் பாதுகாத்து வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இந்தியா முழுவதுமுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரைச் சேமித்து மக்களுக்கு வழங்க, புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெருநகரங்களான பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடிநீருக்கு இப்போதே கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அதைக் கருத்தில் கொண்டு குடிநீர்த்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, ‘நீர் அடிப்படை ஆதாரம்; விற்பனைப் பண்டமல்ல’ என்பது நிலைநாட்டப் பட வேண்டும்.

விவசாயம், மண்வளம்

கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ‘பசுமைப் புரட்சி’யால் ரசாயனங்கள் சார்ந்த விவசாயம், மண்வளத்தைக் குறைத்துவிட்டது. மிக அதிகமான பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் உற்பத்தியைப் பெருக்கின. ஆனால் உணவை நஞ்சாக்கி, நுகர்வோரின் உடல்நலத்தை பாதித்துள்ளன. மண்ணையும் மலடாக்கியுள்ளன.

புதிதாக வந்த பயிர் வகைகள் அதிகமான நீரை எடுத்துக்கொண்டதால் விவசாயத்திற்குத் தேவைப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நீர் ரசாயனங்களால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளது. இவை அனைத்திலிருந்தும் வெளிவரும் வகையில் இயற்கை விவசாய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் நமக்குத் தேவைப்படும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். இதைத்தவிர்க்க எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகளை விளைவிக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். நெல், கரும்பு, உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச விலை உத்தரவாதம் நம்முடைய சிறுதானிய வகைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தடைசெய்து அவை சார்ந்த ஆய்வுகளையும் முற்றிலும் நிறுத்த அரசு ஆவன செய்வதும் அதிமுக்கியம்.

மலைகள், வனங்கள் பாதுகாப்பு

இமயமலை, மேற்குத்தொடர்ச்சி மலை... இந்த இரண்டு மலைகளைத்தான் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் நம்பியிருக்கின்றனர். நதிகளின் தாய்மடியாக இருந்து பயிர்களையும் உயிர்களையும் காக்கும் இந்த மலைகளைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு, மலையின் சூழலைக் கெடுக்கக்கூடிய அனைத்துத் திட்டங்களையும் கைவிட வேண்டும்.

இன்னும் சில ஆண்டுகளில் இவ்வுலகிலுள்ள 10 லட்சம் உயிரினங்கள் அழிந்துவிடும் என்று சமீபத்தில் எச்சரித்திருக்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை. அத்தகைய பேரழிவு நிகழாமலிருக்க அவற்றின் வாழ்விடமாக இருக்கக்கூடிய வனங்களைப் பாதுகாத்தல் அவசியம். காடுகளின் உண்மையான காவலர்கள் பழங்குடி மக்கள். அவர்களை வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட்டு, வனம் சார்ந்த வாழ்வியலை உத்தரவாதப்படுத்த வேண்டும். வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பது கடுமையாகத் தடுக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவின் மூத்த சூழல் போராளி ஒருவரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘‘இது சுற்றுச்சூழலா, வளர்ச்சியா என்கிற கேள்வி கிடையாது; நாம் பிழைத்திருக்கப்போகிறோமா, அழிந்துவிடப்போகிறோமா?’