Published:Updated:

பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதந்த இளைஞர்!- அ.தி.மு.க வெற்றிக்காக பிரார்த்தனை

பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதந்த இளைஞர்!- அ.தி.மு.க வெற்றிக்காக பிரார்த்தனை
பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதந்த இளைஞர்!- அ.தி.மு.க வெற்றிக்காக பிரார்த்தனை

``2019 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக `பத்மாசன நிலையில்' தண்ணீரில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மிதந்து பிரார்த்தனை செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா."

`உன்னால் முடியும் தம்பி இளைஞர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. கோவையில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில் வடிவைப்பாளராக பணியாற்றி வரும் இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று, பத்மாசன நிலையில் தண்ணீரில் மிதந்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் மிதந்தபடி பிரார்த்தனை செய்த யு.எம்.டி. ராஜாவை 
அப்பகுதி அ.தி.மு.க-வினர் வெகுவாகப் பாராட்டினர். 

இதுகுறித்துப் பேசிய ராஜா, ``கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அ.தி.மு.க அரசின் இந்த 7 ஆண்டு ஆட்சியில் தமிழகம் பெற்றுள்ளது. எனவே, இதே வளர்ச்சி மத்தியிலும் கிடைக்க வேண்டுமானால் அ.தி.மு.க-வின் கூட்டணி  வெற்றிபெற வேண்டும். அதனாலேயே நான் பிரார்த்தனை செய்தேன். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுமதி கொடுத்தால் தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் சென்று நான் இந்தச் சாதனையை செய்ய தயாராக இருக்கிறேன்'' என்றார்.