Published:Updated:

`நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் அல்ல!''- இம்ரான்கான்

`நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் அல்ல!''- இம்ரான்கான்
`நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் அல்ல!''- இம்ரான்கான்

புல்மாவா தாக்குதலையடுத்து,  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியிருந்தது. இந்திய விமானப்படை போர் விமானி அபிநந்தன், பாகிஸ்தானிடம் சிக்கியதும் போர் பதற்றம் இன்னும் அதிகரித்தது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, எதிரிநாட்டு விமானி பிடிபட்டால் 8 நாள்களுக்குள் அவரைத் தாய்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். விமானியை விடுவிப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம். உடனடியாக விமானியை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா தெளிவாக கூறிவிட்டது.

சர்வதேச நாடுகளும் இந்திய விமானியை விடுவிக்கப் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தன. தொடர்ந்து, பிடிபட்ட 2 நாள்களிலேயே அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது. இதனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் தணிந்தது. அமைதிக்கு வித்திட்ட இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சோஷியல் மீடியாவில் இம்ரானுக்கு பாராட்டு குவிந்தது. இந்த நிலையில், இம்ரான்கான் இன்று வெளியிட்டுள்ள  ட்வீட்டில், ``நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு நான் இன்னும் எதுவும் செய்துவிடவில்லை. காஷ்மீர் பிரச்னையை காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படியும் தீர்க்க வேண்டும். துணைக்கண்டத்தில் அமைதி நிலவும் வகையிலும் மக்களுக்கு நல்வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே அதற்குத் தகுதி உடையவனாக நான் கருதுகிறேன் '' என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானை ட்வீட்டரில் 90 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.