Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

'கவிமுகில்’ தாமரைச் செல்வன், திருவானைக்காவல். 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கையெழுத்தான ஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்ட பிறகும், கேரளா பழைய நீர்மட்டத்தைக் கொண்டுவர முற்படாதது ஏன்?

25.11.1979 அன்று எம்.ஜி.ஆருக்கும் அச்சுத மேனனுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. அதுவரை 152 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. அணையைப் பலப்படுத்திய பிறகு மீண்டும் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

கழுகார் பதில்கள்
##~##

அந்த ஒப்பந்தத்தில்தான் தமிழ்நாட்டுக்கான பல்வேறு உரிமைகள் முதன்முதலாக விட்டுத் தரப்பட்டன. அணையின் பாதுகாப்பு முழுவதும் தமிழகத்திடம் இருந்து கேரளா கைப்பற்றிக் கொண்டது. ஆனால், அவர்களுக்கான சம்பளத்தை நாம் கொடுக்க வேண்டும் என்ற விநோதமான ஷரத்தும் அதில் உள்ளது. படகு விடும் உரிமை பறிபோனது. குமுளியில் இருந்து அணை வரை உள்ள சாலை முழுவதும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதையும் விட்டுக்கொடுத்தார்கள். மீன் பிடிக்கும் உரிமையையும் இழந்தோம். இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று, நாம் அனுபவிக்கும் பல்வேறு அவஸ்தைகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது எம்.ஜி.ஆர். ஆட்சியில் போடப்பட்ட அந்த ஒப்பந்தம். அந்த விட்டுக்கொடுத்தல்தான் இப்போது அணையை உடைக்கும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டுள்ளது!

 டாக்டர்.உமா பழனிவேல், உடையார் பாளையம்.

கழுகார் பதில்கள்

சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் இறந்ததற்காக, டாக்டரைக் கொலை செய்தவரைப்பற்றி?

இது ஒரு தனி மனிதனின் விரக்தி மற்றும் கோபத்தின் வெளிப்பாடு. மிக மிக அபூர்வமாக நடந்த கண்டிக்கத்தக்க ஒரு சம்பவம்!

ஆனால், அதற்கு மருத்துவ சமுதாயம் செய்த போராட்ட வழிமுறையும் கண்டிக்கத்தக்கது. 'தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து யாருக்கும் சிகிச்சை தர மாட்டோம்’ என்று சொன்னதற்கு, மருத்துவர்கள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தக் கர்ப்பிணி இறந்துபோனதற்கு அந்த டாக்டர் எப்படிக் காரணம் இல்லையோ... அது போல் அந்த டாக்டர் கொலை செய்யப்பட லட்சக்கணக்கான அப்பாவி நோயாளிகள் எப்படிக் காரணம் ஆவார்கள்?

கோ.பாஸ்கர், இளங்கார்குடி.

கழுகார் பதில்கள்

  நூலகத்தை இடம் மாற்ற எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, கவர்னரிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார். இதை வைத்து ஸ்டாலின் செயல்பட ஆரம்பித்து விட்டார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

கழுகார் பதில்கள்

ஸ்டாலின் செயல்பட கருணாநிதி அனுமதித்து விட்டார் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்!

 ரேவதிப்ரியன், ஈரோடு.

கழுகார் பதில்கள்

  மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஒரு சி.டி. திருட்டுப் போய்விட்டதாமே?

இது ஒன்றும் அதிர்ச்சிக்குரியது அல்ல!

ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை கமிஷனின் சில ஆவணங்கள் காணாமல்போயின. லண்டனில் இருந்து எடுத்துவரும்போது விமான நிலையத்தில் காணாமல்போனதாகச் சொன் னார்கள். போஃபர்ஸ் ஊழல் வழக்கில் சில ஆவணங்கள் காணாமல்போயின. காமன் வெல்த் ஊழலிலும் சில ஃபைல்களைக் காணவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஃபைல்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதியே, கிழிக்கப்பட்ட பக்கங்களைக் கேட்டு வெளிப்படையாகவே கேள்விகளை எழுப்பினார். எனவே, இவை எல்லாமே 'மேலிடத்து’ ரகசியங்கள்!

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

கழுகார் பதில்கள்

  'நேர்மையான, திறமையான அரசுக்காகப் பாடுபடுவேன்’ என்ற பிரதமரின் புத்தாண்டு உறுதிமொழி பற்றி?

நேர்மையான திறமையான அரசு இப்போது இல்லை என்பதை இப்படியா பகிரங்கமாக ஒப்புக்கொள்வது?

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்

  காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானின் வரைபடத்தில் முதலில் சேர்த்து... அதன் பிறகு திருத்தி வெளியிட்ட அமெரிக்காவின் செயல்பாடு?

இன்னொரு நாட்டுக்குள் தனது ராணுவ வீரர்களை அனுப்பி பின்லேடனைப் பழி தீர்த்துக் கொண்டதும் அமெரிக்காதான். இப்போது பாகிஸ்தானுக்குச் சலுகை செய்வதாக நினைத்து காஷ்மீரை அவர்களது வரைபடத்தில் இணைப் பதும் அவர்கள்தான். இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ எதன் விஷயத்திலும் தன்னுடைய ஆதிக்க நகத்தை அழுந்தப் பதிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளது அமெரிக்கா என்பதை இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறது!

 எழில். இனியன், போளூர்.

கழுகார் பதில்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் மீதான நடவடிக்கை வழக்கம் போலக் கண்துடைப்புத்தானா?

அப்படி இருக்காது என்றே நினைக் கிறேன்!

'நாங்கள் பணம் கொடுத்துத்தான் இந்த வேலையை வாங்கினோம்’ என்று சிலரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, கிரிமினல் வழக்குகளில் சில உறுப்பினர்கள் கைதாகும் சூழ்நிலையும் அடுத்தடுத்து ஏற்படலாம்!

 நீடா இளஞ்செழியன், சாலியமங்கலம்.

கழுகார் பதில்கள்

  ஆட்சியாளர்கள் தயார் செய்து தரும் அறிக்கையை வாசிப்பதற்கு எதற்கு 'கவர்னர் உரை’ என்று சொல்ல வேண்டும்?

யார் எழுதிக் கொடுத்தால் என்ன? உரை ஆற்றுவது கவர்னர்தானே?

 பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

கழுகார் பதில்கள்

  'தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சிமொழி ஆக்கப் பாடுபடுவேன்’ என்கிறாரே சந்திரபாபு நாயுடு?

தமிழே இன்னமும் முழுமையாக ஆட்சி மொழி ஆகவில்லை என்பதை நாயுடுவுக்கு யாராவது சொல்லுங்கள்!

 மணி.சுதந்திரக்குமார், சென்னை.112.

கழுகார் பதில்கள்

  தங்களின் பதில்கள் அடங்கிய புத்தகத்தைப் பற்றிய கருத்து என்ன?

அது என் டைரி!

கழுகார் பதில்கள்

''அந்தக் குறள்  திருநாவுக்கரசருக்கு அல்ல!''

'புலிகளை ஆதரித்த திருநாவுக்கரசர்... தமிழர்களைக் குறை சொன்ன ஞானதேசிகன்...’ என்ற தலைப்பில் கடந்த 15.1.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியான கட்டுரைக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் விளக்கம் அனுப்பி இருக்கிறார். அதில், ''இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் செய்த உதவிகளை திருநாவுக்கரசர் பட்டியலிட்டுப் பேசிவிட்டு, ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்றது மன்னிக்க முடியாத காரியம். அந்தத் தவறை புலிகள் செய்தார்கள்’ என்றுதான் பேசினார். புலிகளை ஆதரித்து அவர் பேசவில்லை. அதேபோன்று, 'ஈழத் தமிழர்கள்தான் நமது மீனவர்களைத் தாக்குகிறார்கள். சிங்கள மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை’ என்றும் நான் பேசவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்தும் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்று விட்டார்களே என்று, திருநாவுக்கரசர் பேசியதற்கு உதாரணமாகத்தான், 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்...’  என்ற குறளைக் குறிப்பிட்டேன். அது, திருநாவுக்கரசருக்கு சொல்லப்பட்டது அல்ல'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism