Published:Updated:

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

காஞ்சிபுரம்: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 22வது நினைவு தினத்தையொட்டி சரப்ஜித்தின் சகோதரி, அவரது மகள் ஆகியோர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் கொலை செய்யப்பட்ட சரப்ஜித்தின் சகோதரி, அவரது மகன் ஆகியோர் ராஜீவ்காந்தி நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, 'இன்றைய தினம் தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எங்கள் சகோதரனுக்கு நடந்தது போன்ற துயரமான சம்பவம் உலகில் எந்த பகுதியிலும் நடக்கக்கூடாது என்பதை இன்றைய தினத்தில் வலியுறுத்தவே பல்வேறு சிரமத்திற்கு இடையில் இங்கு வந்திருக்கிறோம்'' என்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, கோபண்ணா, யசோதா, ஞானதேசிகன், காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன், மத்திய அமைச்சர் நாராயணசாமி, பீட்டர் அல்போன்ஸ், ஜெ.எம்.ஆரூண், குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு நாராயணசாமி கூறுகையில், ''தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது வெறும் மத்திய அரசின் கையில் மட்டும் கிடையாது. மாநில அரசுகளும் இதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். அவ்வாறு தர தவறினால் எதிர்காலத்தில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்'' என்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவிடத்தில் சரப்ஜித் சகோதரி மலரஞ்சலி

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி சிறப்பு மருத்துவ முகாம், ரத்ததான முகாம்

##~~##
ஆகியவை நடத்தப்பட்டன. இந்த நினைவிடத்தை நிர்வகித்து வரும் நிர்வாகிகள், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், மக்களுக்கான அடிப்படை தேவைகளையும் சரிவர செய்யாததால் கடந்த ஆண்டைவிட பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
&கிருபாகரன்