Published:Updated:

பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா!

பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா!
பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா!
பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா!

புதுடெல்லி: 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தங்களது கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, பா.ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங், எல். கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுவில் புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெற சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

##~~##
 இக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங்,  இன்னும் மென்மேலும் பொதுமக்களுடன், குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்களுடன் கட்சிக்குண்டான தொடர்பை அதிகரித்துக்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்," நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசை தோற்கடிக்க உதவும் எந்த ஒரு வாய்ப்பையும் பா.ஜனதா தவறவிடாது" என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தலாம் என அக்கட்சி தலைவர்கள் பலர் கூறி வந்த நிலையில், வேறு சில மூத்த தலைவர்கள் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்ததால், இவ்விஷயத்தில் பா.ஜனதா தலைவர்களிடையே கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இந் நிலையில், இன்றைய கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஏதேனும் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போதே எதையாவது முடிவெடுத்து, அதனால் குழப்பம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே முடிவெடுக்க பா.ஜனதா தயங்குவதாக தெரிகிறது.