Published:Updated:

மாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க!  - முரண்டுபிடிக்கும் தி.மு.க.

மாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க!  - முரண்டுபிடிக்கும் தி.மு.க.
மாநிலங்களவை எம்.பி சீட் எதிர்பார்க்கும் ம.தி.மு.க!  - முரண்டுபிடிக்கும் தி.மு.க.

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு தொகுதிகளும், ஐ.ஜே.கே. கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ம.தி.மு.க இரண்டு தொகுதிகளோடு ஒரு மாநிலங்களவை எம்.பி தொகுதியும் கேட்பதால், பேச்சுவார்த்தை இழுபறியாவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், வரும் ஜூலை மாதம் ஆறு மாநிலங்களவை எம்.பி இடங்கள் காலியாகின்றன. எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைக்கும். அதில் ஒரு எம்.பி பதவியைக் கேட்டு ம.தி.மு.க நெருக்குகிறது.  

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இம்முறை தன்னை இரண்டு தொகுதிகளுக்குள் தி.மு.க அடக்குவதை விரும்பவில்லை. ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கொடுத்தால்தான், தன் கட்சிக்கு கௌரவமாக இருக்கும் என்று வைகோ கருதுகிறார். ஈரோடு, திருச்சி தொகுதியை தருவதற்குத் தயாராக இருப்பதாக தி.மு.க தரப்பு உத்தரவாதம் அளித்தும், வைகோ இறங்கிவருவதாகத் தெரியவில்லை. அவரை சமாதானப்படுத்த மு.க.ஸ்டாலினே நேரடியாக முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற உள்ள பிரசாரப் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி மேடையேறும்போதே, தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடையேற்றிவிட அ.தி.மு.க-வினர் மும்முரமாகியுள்ளனர். இந்நிலையில், கூட்டணி இறுதிவடிவத்தை எட்ட முடியாமல் தி.மு.க தள்ளாடுகிறது.