Published:Updated:

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உடல் நலம் விசாரித்தார் கருணாநிதி

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உடல் நலம் விசாரித்தார் கருணாநிதி
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உடல் நலம் விசாரித்தார் கருணாநிதி

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசின் உடல்நிலை குறித்து, கருணாநிதி நலம் விசாரித்தார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாசின் உடல் நலம் விசாரித்தார் கருணாநிதி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 20ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தீவிர கண்காணிப்பு பிரிவு சிகிச்சையில் இருக்கும் டாக்டர் ராமதாசை பார்க்க பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ராமதாசின் மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கி கவனித்து வருகின்றனர்.

##~~##
இந்நிலையில் நேற்று டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யை அப்பல்லோ மருத்துவமனைக்கு கருணாநிதி அனுப்பி வைத்தார். ஐ.சி.யு. வார்டில் இருக்கும் ராமதாசை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை என்பதால் அங்கிருந்த அன்புமணி ராமதாசிடம் டி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதி சார்பில் உடல்நலம் விசாரித்தார். சுமார் 15 நிமிடம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அதன்பிறகு டி.கே.எஸ்.இளங்கோவன் கருணாநிதியிடம் சென்று, தான் அன்புமணி ராமதாசிடம் பேசிய விவரங்களை தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.