Published:Updated:

``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டேரிப்பட்டில் நேற்று (05.03.2019)  நடைபெற்றது. 

``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க அமைச்சர் சி.வி.சண்முகம், “இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதற்காக. ஜெயலலிதா, ``ஏழை எளிய மக்களுக்குக் குறிப்பாக, தாய்மார்களுக்கு, கிராமப்புற விவசாய மக்களுக்கு, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில், உதவி செய்கிற ஒரு நிகழ்ச்சியாக, நலத்திட்டங்கள் வழங்கும் ஒரு நிகழ்ச்சியாக, நீங்கள் கொண்டாட வேண்டும்’’ எனக் கூறியவர். 

அவர்களின் கட்டளையை ஏற்று இத்தனை ஆண்டுக்காலம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இன்றைக்கு அம்மா ஜெயலலிதா நம்முடன் இல்லை. நம்மை எல்லாம் வாழவைத்தவர், இந்த நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர். இன்றைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்காகவே தன் உயிரைக் கொண்டு வாழ்ந்தவர். எங்களை எல்லாம் அடையாளம் காட்டி தேர்தல்களில் எல்லாம் பதவிகளை வாரி வழங்கி, பதவியிலே அமரவைத்து அழகு பார்த்தவர். இன்றைக்கு அவர் நம்மோடு இல்லை. நம்மை விட்டு மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், இன்னும் அம்மா நம்மோடு இருக்கின்ற ஒரு உணர்வுதான் இன்றைக்கும் இருக்கிறது. அம்மாவுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான், அவர்கள் இல்லையென்றாலும் அம்மாவுடைய பிறந்தநாளை ஏழை, எளிய மக்களுக்கு உதவுகிற ஒரு நாளாகக் கருதி இப்படிப்பட்ட நலத்திட்ட உதவிகளைத் தமிழகமெங்கும் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

மயிலம் ஒன்றியத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியும் மக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இன்றைக்கு ஜெயலலிதா இல்லையென்றாலும் அவரின் கடைசி ஆசை, எண்ணம் என்னவென்று நமக்குத் தெரியும். இன்றைக்கு நம்மோடு இருந்திருக்க வேண்டியவர். ஒரு சதிகார கும்பலால், ஒரு சதித்திட்டத்தால் நம்மைவிட்டுப்  பறிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது. ஏது நடந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

அம்மாவுக்கு வீட்டில என்ன நடந்தது, வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுபோற வழியில என்ன நடந்தது, மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடந்தது என்பது இதுவரைக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது. 
அந்த மர்மத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு விசாரணை ஆணையம் அமைய வேண்டும். ஆனால், ஒரு மருத்துவமனையிலே, என்ன சிகிச்சை அளித்தோம் என்று சொல்வதற்கே இன்று நீதிமன்றத்துக்குச் சென்று, “நாங்கள் என்ன சிகிச்சை அளித்தோம் என்று கேட்கக் கூடாது, எங்களை வற்புறுத்தக் கூடாது” என்று சொன்னால் அங்கேதான் நமக்குப் பலத்த சந்தேகம் வருகிறது. யாருடைய வற்புறுத்தலின் பேரிலோ, ஏதோ ஒரு சதிகார கூட்டத்தின் வற்புறுத்தலின் பேரிலோ இன்றைக்கு, ‘அதை நாங்கள் வெளியிட மாட்டோம். எங்களை ஆணையம் வற்புறுத்திக் கேட்கக் கூடாது’ என்று நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடுத்துள்ளார்கள் என்றால், அங்கேதான் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள்... ஏன் மறைக்கணும். எதற்கு மறைக்கணும்..? அப்போ, மறைக்கிறார்கள் என்றால் எங்கோ தவறு நடந்துள்ளது என்று அர்த்தம். மடியில் கனமில்லை என்றால் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே. ‘இதைத்தான் நாங்கள் சிகிச்சை கொடுத்தோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு இந்த இந்த சிகிச்சை நாங்கள் கொடுத்துள்ளோம் என்று சொல்ல வேண்டியதுதானே…’ ஆனால், அதைச் சொல்ல மாட்டோம் என்று  இன்றைக்கு அவர்கள் சொல்லுகிறார்கள் என்றால், யாருடைய பின்னணியில் இன்று சொல்லப்பட்டிருக்கிறது. யார் அன்றைக்கு அந்த மருத்துவமனையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், அம்மாவை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து அம்மா இறக்கின்ற வரை விட்டு நகராமல், யாரும் அம்மாவைப் பார்த்துவிடக் கூடாது என்று தெள்ளத் தெளிவாக இருந்து இப்படிச் செய்தவர்கள். இன்றைக்கு நம் அம்மாவை நம்மிடையே இருந்து பிரித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலேயே அரசியல் தலைவர்கள் மோடியைப் பார்த்து பயப்படக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், மோடி பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி யார் என்றால் அது ஜெயலலிதாதான். மோடி, வீடுதேடி ஒரு தலைவரை சந்திக்கிறார் என்றால் அது ஜெயலலிதாதான். அப்படிப்பட்டவருக்கே ஒரு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை எடுக்க முடியல என்று இல்லை. சிகிச்சை எடுப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தும் அம்மாவை விட்டுவிட்டோம். 

``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

அம்மா கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார். சட்டமன்றத்தில் வைத்து இதைச் சொன்னார். “எனக்குப் பிறகும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நூறாண்டுக் காலம் வாழும்” எனக் கூறிவிட்டு வரேன்னும் சொல்லல, போறேன்னும் சொல்லல, நேராக போயஸ்கார்டனுக்கு போனவங்க போனவங்கதான். அதற்கப்புறம் அந்த சதிகாரக்கூட்டம், கொலைகாரக் கூட்டம் அம்மாவை நம்மிடம் பிணமாகத்தான் ஒப்படைத்தது. அம்மாவின் அந்தக் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அம்மாவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கும் வகையில் இரட்டை இலைச் சின்னத்தை வரும் தேர்தலில் நாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கூட்டத்துக்கு வந்த ஒரு பெண்மணி, ``எனக்கு நலத்திட்டத்தில் பொருள் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள். அதனால், சென்னை சென்ற நான் அவசர அவசரமாக இங்கு வந்தேன். ஆனால், தற்போது இல்லை என்கிறார்கள். நான் என்ன ஓட்டுப் போடவில்லையா என்ன” என அங்கு இருந்தவர்களிடம் கேட்டார். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது.