Published:Updated:

`தே.மு.தி.கவுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிடும்!- அமாவாசையை மேற்கோள் காட்டும் பா.ஜ.க

`தே.மு.தி.கவுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிடும்!- அமாவாசையை மேற்கோள் காட்டும் பா.ஜ.க
`தே.மு.தி.கவுடன் தொகுதி உடன்பாடு முடிந்துவிடும்!- அமாவாசையை மேற்கோள் காட்டும் பா.ஜ.க

தே.மு.தி.க எந்தக் கட்சியுடன்  கூட்டணி அமைக்கப் போகிறது என்பது இன்று உறுதியாகி விடும் என்று தெரிகிறது. குறிப்பாக அ.தி.மு.க  - பா.ஜ.க  கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அ.தி.மு.க  மற்றும் பா.ஜ.க  தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க  கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பா.ம.க-வுடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து தே.மு.தி.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதைப் போன்று தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க  கோரியது. இதைப் பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஏற்க மறுத்துவிட்டது. 

தே.மு.தி.க-வுக்கு தொகுதி உடன்பாடு பிரச்னை ஒருபுறம் என்றால், அ.தி.மு.க-வில் உள்ள இரண்டு அமைச்சர்களின் கமென்ட் தே.மு.தி-க-வை கடுப்பேற்றியதால் அ.தி.மு.க-வுடன் - தே.மு.தி.க கூட்டணி வைக்கத் தயங்கியதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க, தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தக்  இருகட்சிகளின் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. காரணம் அ.தி.மு.க-விடம் கேட்ட தொகுதிகளை தி.மு.க-விடமும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதில் மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க-வின் நிலைப்பாடு தற்போது இறுதி வடிவத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தே.மு.தி.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதியாகி விடும் பா.ஜ.க  தரப்பில் விசாரித்தபோது, ``தே.மு.தி.க 5 தொகுதிகளைக் கேட்கிறது. ஆனால், அ.தி.மு.க நான்கு தொகுதிகளை தருகிறோம் என்கிறது. அதை தே.மு.தி.க ஏற்பதில் தயக்கம் காட்டுகிறது. எப்படியும் இன்று அமாவாசை என்பதால் தே.மு.தி.க-வுக்கு தொகுதி உடன்பாடு முடிந்துவிடும்" என்றார். இதுகுறித்து அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச் செல்வனிடம் பேசியபோது, ``தே.மு.தி.க-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் முடிவு தெரியவரும் "என்றார்.