Published:Updated:

அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்! ஒரு தொகுதி உறுதி

அ.சையது அபுதாஹிர்
அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்! ஒரு தொகுதி உறுதி
அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ்! ஒரு தொகுதி உறுதி

மிழ் மாநில காங்கிரஸ் - அ.தி.மு.க உடனான மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனக் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியும் கிட்டத்தட்ட இறுதிச் செய்யப்படும்  நிலையில் உள்ளது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் பாண்டிச்சேரி உட்பட  10 தொகுதிகள் ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில்,. தமிழ் மாநிலக் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இன்னும் சற்று நேரத்தில் கூட்டணி குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தே.மு.தி.க வை அ.தி.மு.க கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கும் நிலையில் அந்தப் பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.கவும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ம.க தலைவர்களும் தங்கள் கட்சியின் தொண்டர்களுக்கு மோடியின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இப்போது புதிதாக கூட்டணியில் இணைய உள்ள த.மா.கவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.