Published:Updated:

'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி!'

'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி!'
'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி!'
'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி!'

பெங்களூரு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திடுக்கிடும் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாளையொட்டி, மைசூர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையிலேயே சித்தராமையா இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அவர் பேசுகையில்,"1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வேளையில் ஒரு வயதான பெண், திடீரென்று ராஜீவ் காந்தியின் காருக்கு குறுக்கே பாய்ந்தார்.

##~~##
ராஜீவின் கார் சட்டென்று நின்றதால், அவரது காருக்கு பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் ராஜீவ் காந்தியை கொல்வதற்காக நடந்த சதி என்பது பின்னர் தெரிய வந்தது. இது நடந்த 10 நாட்களுக்கு பின்னர் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி ஒரு இளைய தலைவரை இழந்துவிட்டது.
அவரது மறைவுக்கு பிறகுதான் மைசூர் சம்பவம், ராஜீவ் படுகொலைக்கான முன்னோட்டம் என்பது தெரிய வந்தது" என்றார்.
ராஜீவ் கொலையில் வேறு சில சக்திகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி கொலைவழக்கு சதி குறித்து விசாரித்த ஜெயின் கமிஷன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் சித்தராமையா வெளியிட்டுள்ள இந்த புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.